சிறப்பு பகுதிகள்

கந்தனுக்கு அரோஹரா

'கருப்பர் கூட்டம்' நிர்வாகி குண்டர் சட்டத்தில் சிறை

Added : ஜூலை 29, 2020
Share
Advertisement
 'கருப்பர் கூட்டம்' நிர்வாகி குண்டர் சட்டத்தில் சிறை

சென்னை : கந்த சஷ்டி கவசத்தை ஆபாசமாக சித்தரித்து, 'கருப்பர் கூட்டம்' என்ற, 'யு டியூப்' சேனலில், வீடியோ வெளியிட்ட, அதன் நிர்வாகி செந்தில் வாசன், குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

ஹிந்துக்கள் மனம் புண்படும்படி, தொடர்ச்சியாக, கருப்பர் கூட்டம் என்ற, யு டியூப் சேனலில், வீடியோக்கள் வெளியிடப்பட்டு வந்தன.முருகப் பெருமானை போற்றி பாடப்படும், கந்த சஷ்டி கவசத்தை ஆபாசமாக சித்தரித்து, சமீபத்தில் வீடியோக்கள் வெளியிடப்பட்டன.இது குறித்து, மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரித்து, வேளச்சேரியைச் சேர்ந்த, செந்தில்வாசன், 49, போரூர் அடுத்த, ராமாபுரத்தைச் சேர்ந்த, சுரேந்திரன் நடராஜன் உட்பட, நான்கு பேரை கைது செய்து, சிறையில் அடைத்தனர்.

இவர்களில், செந்தில்வாசனை, சென்னை, எழும்பூர் நீதிமன்றத்தின் அனுமதி பெற்று, மூன்று நாட்கள் போலீஸ் காவலில் விசாரித்து, மீண்டும் சிறையில் அடைத்தனர்.விசாரணையில், செந்தில்வாசன், தி.மு.க.,வின், ஐ.டி., அணி எனப்படும், தகவல் தொடர்பு பிரிவில் பணிபுரிந்து வந்தது தெரிய வந்தது. மேலும், சேனலுக்கான நிதி திரட்டும் பணியை, செந்தில்வாசன் தான் செய்து வந்துள்ளார்.இந்நிலையில், அவரை, கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் உத்தரவின்படி, போலீசார் நேற்று, குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்துஉள்ளனர். ஏற்கனவே, இவரது கூட்டாளி, சுரேந்திரன் நடராஜன், நேற்று முன்தினம், குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X