சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சிறுமி பாலியல் பலாத்காரம்

Added : ஜூலை 29, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement

நாகர்கோவில் : சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில், அ.தி.மு.க., முன்னாள் எம்.எல்.ஏ., நாஞ்சில் முருகேசன் தலைமறைவானார்.

சிறுமியின் தாய் உட்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டனர்.குமரி மாவட்டம், நாகர்கோவில் கோட்டார் பகுதியைச் சேர்ந்த, 15 வயது சிறுமி காணாமல் போனதாக, அவரது தந்தை, கோட்டார் போலீசில் புகார் செய்தார். போலீசார், சிறுமியையும், ஒரு இளைஞரையும் மீட்டனர். போலீசாரிடம் அந்த சிறுமி, 'என் தாயே, என்னை தவறான வழிக்கு கொண்டு செல்கிறார்; அது பிடிக்காமல், எனக்கு பிடித்த இளைஞருடன் சென்றேன்' என, தெரிவித்தார்.சிறுமியை, குழந்தைகள் நல பாதுகாப்பு அதிகாரி முன்னிலையில், போலீசார் ஆஜர்படுத்தினர்.

அப்போது சிறுமி, நாகர்கோவில் தொகுதி, அ.தி.மு.க., முன்னாள், எம்.எல்.ஏ., நாஞ்சில் முருகேசன் உட்பட சிலர் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாகவும், அவர்களை அடையாளம் காட்ட முடியும் எனவும் கூறியுள்ளார்.இது குறித்து, தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி, அரசுக்கு அறிக்கை அனுப்பியதால், கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து, நாஞ்சில் முருகேசன் நீக்கப்பட்டார். அவர் மீது, 'போக்சோ' சட்டத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.

இந்நிலையில், சிறுமியின் தாய் ஆனந்தி, 45, ஆட்டோ டிரைவர்கள் பாலு, 66, அசோக்குமார், 43, சிறுமியின் உறவினர் கார்த்திக், 23, ஆகியோர் நேற்று கைது செய்யப்பட்டனர். தலைமறைவான நாஞ்சில் முருகேசனை போலீசார் தேடி வருகின்றனர். மற்றொரு வழக்குஈரோடு மாவட்டம், சித்தோடு அருகே, ஆர்.என். புதுாரைச் சேர்ந்தவர் பெரியசாமி, 52; காந்திய மக்கள் இயக்கத்தின், ஈரோடு மாவட்ட தலைவர்.அதே பகுதியைச் சேர்ந்த, 12 வயது சிறுமியிடம், லேப்டாப்பில் பாலியல் படங்களை காட்டி, தொந்தரவு செய்துள்ளார். பெற்றோரிடம் சிறுமி கூறவே, அவர்கள், பவானி அனைத்து மகளிர் போலீசில் புகார் தெரிவித்தனர்.'போக்சோ' சட்டத்தில் வழக்குப்பதிவு செய்த போலீசார், தலைமறைவாக உள்ள பெரியசாமியை தேடி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
RaajaRaja Cholan - Perungudi,சிங்கப்பூர்
29-ஜூலை-202007:14:50 IST Report Abuse
RaajaRaja Cholan இழி பிறப்பு கூட தன் குழந்தைக்காக உயிரை விடும். சமீபத்தில் ஒரு எலி தன் குஞ்சுகளை நீரில் இருந்து உயிரை பணயம் வைத்து எடுத்து வந்ததை பார்த்தோம் , இந்த தாய் என்று கூறப்படும் இந்த ஜந்துவை என்ன செய்யவது. நிக்க வைச்சு சுடனும் சனியனை , இவளை தாய் என்று கூறுவது , தாய்மைக்கு அசிங்கம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X