பொது செய்தி

தமிழ்நாடு

'மீண்டும் தொற்று பாதித்தால் முதியோருக்கு ஆபத்து வரலாம்'

Added : ஜூலை 29, 2020
Share
Advertisement

சென்னை : 'முதியவர்கள், நாள்பட்ட நோயாளிகளுக்கு, இரண்டாவது முறையாக கொரோனா தொற்று பாதித்தால், உயிரிழப்பை ஏற்படுத்தலாம்' என, சுகாதாரத்துறை நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு, 2.25 லட்சத்தை கடந்துள்ளது. இதில், 1.65 லட்சத்துக்கும் மேற்பட்டோர் குணமடைந்துஉள்ளனர். பாதிக்கப்பட்டவர்களில், 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர், முதியவர்கள் மற்றும் நாள்பட்ட நோயாளிகள். இதில், 2,500க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர். எனினும், 40 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் குணமடைந்துள்ளனர்.இந்நிலையில், கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்த முதியவர்கள், நாள்பட்ட நோயாளிகளுக்கு, மீண்டும் கொரோனா தொற்று பரவ வாய்ப்புள்ளது என, சுகாதார நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

இதுகுறித்து, சுகாதார நிபுணர்கள் கூறியதாவது:கொரோனாவால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்ற பலருக்கு, நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது. ஆனால், முதியவர்கள், நாள்பட்ட நோயாளிகள் குணமடைந்த பின்னும், மீண்டும் தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. எனவே, கொரோனாவில் இருந்து மீண்டவர்கள், நீண்ட காலத்திற்கு எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.நாள்பட்ட நோயாளிகள், ஏற்கனவே எடுத்து வரும் மருந்துகளை தொடர்ந்து உட்கொள்ள வேண்டும். அவ்வப்போது, மருத்துவ பரிசோதனைகளை செய்வது அவசியம். ஒருமுறை, கொரோனா வந்து விட்டதால், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் என்ற, எண்ணத்தை கைவிட வேண்டும். இரண்டாவது முறை தொற்று ஏற்பட்டால், உயிரிழப்பை ஏற்படுத்துவதாக அமையும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X