கேரள வியாபாரிகள் வராததால் மரவள்ளி கிழங்கு விலை வீழ்ச்சி| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கேரள வியாபாரிகள் வராததால் மரவள்ளி கிழங்கு விலை வீழ்ச்சி

Added : ஜூலை 29, 2020
Share
 கேரள வியாபாரிகள் வராததால் மரவள்ளி கிழங்கு விலை வீழ்ச்சி

பேரூர்:கேரள வியாபாரிகள் வருகை இல்லாததால், மரவள்ளி கிழங்கு விலை கடும் வீழ்ச்சி அடைந்துள்ளது.தொண்டாமுத்துார் ஒன்றிய கிராமங்களில், மரவள்ளி சாகுபடி செய்யப்படுகிறது. ஓராண்டு பயிரான மரவள்ளி, வறட்சியை தாங்கி வளரக்கூடியது. சாகுபடி செய்த எட்டாவது மாதத்தில் இருந்து அறுவடை துவங்கும்.கேரள மக்கள் விரும்பி உண்பதால், அங்கிருந்து வரும் வியாபாரிகள், ஏக்கருக்கு குறிப்பிட்ட தொகையை நிர்ணயம் செய்து, மொத்தமாக எடுத்து செல்வது வழக்கம்.தற்போது, மாதம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில், அறுவடை துவங்கி நடந்து வருகிறது. இந்நிலையில், கொரோனா பரவல் காரணமாக, கேரளாவில் இருந்து வியாபாரிகள் வராததால், அதன் விலை கடும் வீழ்ச்சி அடைந்துள்ளது. இதனால், மரவள்ளி சாகுபடி செய்த விவசாயிகள், பெருத்த நஷ்டத்தை சந்தித்துள்ளனர்.விவசாயி வடிவேல், ''பயிர் வளர்ச்சி அடைந்த நிலையில், காற்றுடன் பெய்த மழையால் செடிகள் சாய்ந்து விட்டன; கிழங்கு வளர்ச்சி பாதித்து, மகசூல் குறைந்துள்ளது. கொரோனா பரவலால், உள்ளூர் விற்பனை மட்டுமே உள்ளது; கிலோ, ரூ.8க்கு போகிறது. கேரள வியாபாரிகள் வந்திருந்தால், கிலோ, ரூ.15 வரை சென்றிருக்கும்.நடப்பாண்டு பெருத்த நஷ்டம் ஏற்பட்டு விட்டது,'' என்றார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X