பொது செய்தி

தமிழ்நாடு

ரூ. 7.19 கோடி மதிப்பில் குடிமராமத்து பணிகள் 

Added : ஜூலை 29, 2020
Share
Advertisement

கோவை:கோவை ஊரக பகுதிகளில், 7.19 கோடி ரூபாய் மதிப்பில், 43 பிரிவுகளின் கீழ் குடிமராமத்து பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. இத்திட்டத்தின் கீழ், கால்வாய்களில் இருக்கும் புதர்களை அகற்றுதல், மேடு பள்ளங்களை சமன்செய்தல், மதகுகள், அடைப்பான்கள், மிகை நீர் கலிங்குகள், குறுக்கு கட்டுமான அமைப்புகளை சீரமைத்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடந்து வருகின்றன. மாநில அரசு, 2020-21ம் ஆண்டுக்கு, இத்திட்டத்தின் கீழ், 499.79 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளது.இத்திட்டத்தில், ஆழியார் வடிநில கோட்டத்தின் கீழ், 3 கிராம நீரினை பயன்படுத்தும் பாசன விவசாயி நலச்சங்கங்களுக்கு 55 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அரசு தரப்பில், 90 சதவீதமும், விவசாயிகள் சங்க தரப்பில், 10 சதவீத பங்களிப்புடனும் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.பாசனகால்வாயில் வளர்ந்துள்ள, செடிகொடிகளை அகற்றி கால்வாயை சுமார், 45.72 கி.மீ., துாரத்திற்கு கால்வாய் துார்வாருதல், 115 மதகுகளை சீரமைத்தல், உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடந்து வருகின்றன. அதன் படி, நடப்பாண்டில் இப்பணிகள் வாயிலாக, 86,214 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறும் என, மாவட்ட நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X