சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சாலையில் 'வேல்' படம் வரைந்த  இந்து அமைப்பினர் மீது வழக்கு 

Added : ஜூலை 29, 2020
Share
Advertisement

கோவை:சாலையில் வேல் படம் வரைந்துள்ள இந்து அமைப்பை சேர்ந்த, 14 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.ஹிந்து கடவுள் முருகபெருமானை போற்றி பாடப்படும், கந்த சஷ்டி கவசத்தை ஆபாசமாக சித்தரித்து, கருப்பர் கூட்டம் என்ற, 'யு டியூப்' சேனலில் வெளியிட்டனர். இந்த சம்பவம் ஹிந்துக்கள், ஹிந்து அமைப்புகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் இடையே, கொந்தளிப்பை ஏற்படுத்தியது. அமைதி வழியில் எதிர்ப்பை தெரிவிக்க, இந்து அமைப்பினர் சிலர், சாலைகளில் முருக கடவுளின் வேல் படத்தை வரைந்து வருகின்றனர்.கோவையில், ஆர்.எஸ்.புரம், சாய்பாபாகாலனி, உக்கடம், செல்வபுரம், குனியமுத்துார், போத்தனுார், காந்திபுரம், சரவணம்பட்டி உட்பட பல்வேறு இடங்களில், சாலையில் வேல் படம் வரைந்து, 'வெற்றிவேல், வீரவேல்' என்று எழுதியுள்ளனர்.இது தொடர்பாக, இந்து முன்னணி, இந்து மக்கள் கட்சி, பா.ஜ., உள்ளிட்ட கட்சியினர், 14 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X