போக்குவரத்து ஊழியர் மருத்துவ காப்பீடு நீட்டிப்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

போக்குவரத்து ஊழியர் மருத்துவ காப்பீடு நீட்டிப்பு

Added : ஜூலை 29, 2020
Share

சென்னை : போக்குவரத்து கழக ஊழியர்களுக்கான, மருத்துவ காப்பீடு திட்ட காலம் நீட்டிக்கப்பட்டு உள்ளது.

இது குறித்து, சென்னை மாநகர போக்குவரத்து கழக மேலாண் இயக்குனர் வெளியிட்டுள்ள சுற்றறிக்கை: தற்போது வெளியாகியுள்ள அரசாணையில், போக்குவரத்து கழக பணியாளர்களுக்கு, 2016ல் உருவாக்கப்பட்டுள்ள, புதிய மருத்துவ காப்பீட்டு திட்டம், கொரோனா பரவல் காரணமாக, இந்தாண்டு ஜூலை முதல், அடுத்தாண்டு ஜூன் வரை நீட்டிக்கப்படுகிறது. இத்திட்டத்தில், சலுகைகளும், சிறப்பு அம்சங்களும் இடம் பெற்றுள்ளதால், அனைத்து பணியாளர்களும், இதை சுமுகமாக பயன்படுத்திக் கொள்ளலாம்.

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர், அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனைகளில் சேர்ந்து சிகிச்சை பெற்றால், அனைத்து மருத்துவ செலவின அசல் ரசீதையும் ஒப்படைத்து, இத்திட்டத்தின்படி, அத்தொகையை திரும்ப பெறலாம். அதற்கு, அசல் ரசீதுடன், இந்த திட்டத்தின் தொகை திரும்ப பெறும் படிவத்தை நிரப்பி, தொழிலாளர் நலப்பிரிவில் சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X