உப்பிலிபாளையத்தில் உரசுது உயர் அழுத்த மின்கம்பி

Added : ஜூலை 29, 2020
Share
Advertisement

விளக்கு எரிவதில்லைகுனியமுத்துார், இடையர்பாளையம், வி.பி.சி.நகரில் உள்ள, மின் கம்பத்தில்(எண்: 29), கடந்த இரு மாதங்களாக, விளக்கு எரிவதில்லை. மின் வாரியத்தில் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை.- பாலன், வி.பி.சி.நகர்.

சாக்கடை கால்வாய் அடைப்புமாநகராட்சி, 76வது வார்டுக்கு உட்பட்ட, செல்வபுரம், முத்துசாமி காலனி, பிள்ளையார் கோவில் வீதியில், சாக்கடை கால்வாய் அடைப்பால், கழிவுநீர் தேங்கி, துர்நாற்றம் வீசுகிறது.- கார்த்திக், முத்துசாமி காலனி.

ஊரடங்கு இல்லைகொரோனா பரவல் தடுக்க, அறிவிக்கப்பட்டுள்ள ஊரடங்கு, பேரூர் செட்டிபாளையத்தில் மட்டும் கடைபிடிக்கப்படுவதில்லை. இங்குள்ள கடைகள் வழக்கம் போல், செயல்படுகின்றன; மக்களும் சாலைகளில் சென்று வருகின்றனர். ரோந்து போலீசார் கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும்.- நாராயணமூர்த்தி, பேரூர் செட்டிபாளையம்.

ஆபத்தான மின் கம்பம்மாநகராட்சி, 5வது வார்டுக்கு உட்பட்ட, கவுண்டம்பாளையம், டி.வி.எஸ்.,நகர் ரோடு, ஜெயம் நகர் முதல் வீதியில் உள்ள, மின் கம்பம் சிதிலமடைந்து விழும் நிலையில் உள்ளது. இக்கம்பத்தை அகற்றிவிட்டு, புது கம்பம் அமைக்க வேண்டும்.- பன்னீர், ஜெயம் நகர்.

குடிநீர் தட்டுப்பாடுஎஸ்.ஐ.எச்.எஸ்., காலனி ரோடு, நேதாஜிபுரத்தில், குடிநீர் வினியோகம் சீராக இல்லை. 15 நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே வினியோகிக்கப்படுவதால், தட்டுப்பாடு நிலவுகிறது.- பாலகிருஷ்ணன், நேதாஜிபுரம்.

குப்பை வண்டி இல்லைமேட்டுப்பாளையம் நகராட்சி, 26வது வார்டுக்கு உட்பட்ட பகுதிகளில் குப்பை அள்ளிச் செல்ல வாகனம் இல்லாததால், பழைய பாய் மற்றும் சாக்குப்பைகளில் குப்பையை சேகரித்து, சாலைகளில் இழுத்து செல்கின்றனர்.- கிருஷ்ணசாமி, மேட்டுப்பாளையம்.

சவுரிபாளையத்தில் வெளிச்சமில்லைமாநகராட்சி, 66வது வார்டுக்கு உட்பட்ட, சவுரிபாளையம், ராஜிவ்காந்தி நகரில் உள்ள, மின் கம்பத்தில்(எண்: 396) விளக்கு எரிவதில்லை.- செல்வராஜ், ராஜிவ்காந்தி நகர்.

மின் விபத்து அபாயம்உப்பிலிபாளையம், லயன்ஸ் பஸ் ஸ்டாப் அருகில், ஏ.கே.ஜி., நகர், 3வது வீதியில், உயர் மின் அழுத்த கம்பிகள் மிக தாழ்வாக செல்கின்றன. பலத்த காற்று அடிக்கும்போது, இவை அருகில் உள்ள வீடுகளின் சுவர்களில் உரசுகின்றன. கம்பியை உயர்த்திக்கட்ட வேண்டும்.- சேகர், ஏ.கே.ஜி., நகர்

ஏ.டி.காலனியில் துர்நாற்றம்மாநகராட்சி, 39வது வார்டுக்கு உட்பட்ட, பீளமேடு, ஏ.டி.காலனியில், சாக்கடை கால்வாய் அடைப்பால், கழிவுநீர் தேங்கி, சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது; துர்நாற்றம் வீசுகிறது.- பிரசாந்த்குமார், ஏ.டி.காலனி.

குப்பை குவியல்மாநகராட்சி, 97வது வார்டுக்கு உட்பட்ட, ஸ்ரீகிருஷ்ணா நகரில், குப்பை மலை போல் குவிக்கப்பட்டுள்ளது. துாய்மை பணியாளர்கள் இப்பகுதிக்கு வருவதில்லை.-வேல்முருகன், ஸ்ரீகிருஷ்ணா நகர்.

சாக்கடை கால்வாயை துார்வாரணும்சரவணம்பட்டி, நமச்சிவாய நகரில், சாக்கடை கால்வாய் அடைப்பால், கழிவு தேங்கியுள்ளது. இக்கால்வாயை துார்வாரி சீரமைக்க வேண்டும்.- ரமேஷ், நமச்சிவாய நகர்.

பன்றிகள் தொல்லை அதிகம்மேட்டுப்பாளையம், சிறுமுகை, வ.உ.சி., நகர், ஏழாவது வீதியில், பன்றிகள் தொல்லை அதிகரித்துள்ளது. சாலையில் ஆங்காங்கே சுற்றித்திரியும் இவை, வீடுகளுக்குள்ளும் நுழைவதால், மக்கள் அவதிப்படுகின்றனர்.- பழனிசாமி, வ.உ.சி., நகர்.

ரமணி நகரில் வெளிச்சமில்லைமாநகராட்சி, 12வது வார்டுக்கு உட்பட்ட, கே.கே.புதுார், ரமணி வீதியில் உள்ள, மின் கம்பத்தில்(எண்:170), கடந்த ஆறு மாதங்களாக, விளக்கு எரிவதில்லை. மின் வாரியத்தில் பலமுறை புகார் கொடுத்தும் நடவடிக்கை இல்லை.- பாஸ்கரன், ரமணி வீதி.

நாய் தொல்லை அதிகரிப்புசெட்டிவீதி, கே.சி.தோட்டம் பகுதியில், தெரு நாய்கள் தொல்லை அதிகரித்துள்ளது. சாலையில் செல்வோர் அச்சப்படுகின்றனர்.- ரகு, செட்டிவீதி.

விளக்கு எரிவதில்லைகோவைபுதுார், சாந்தி நகரில் உள்ள, மின் கம்பத்தில்(எண்:18), விளக்கு எரிவதில்லை.- மணிகண்டன், சாந்தி நகர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X