பொது செய்தி

தமிழ்நாடு

கட்டட வரன்முறைக்காக ..

Added : ஜூலை 29, 2020
Share
Advertisement

சென்னை : விதிமீறல் கட்டட வரன்முறை திட்டத்தில் பெறப்பட்ட, 1,735 விண்ணப்பங்கள், எவ்விதமான ஆய்வும் செய்யப்படாமல், நிலுவையில் உள்ளதாக புகார் எழுந்துள்ளது.

தமிழகத்தில், விதிமீறல் கட்டடங்களை வரன்முறை செய்யும் திட்டம், 2017ல் அறிவிக்கப் பட்டது. இதன்படி, 'ஆன்லைன்' முறையில், கட்டட உரிமையாளர்கள் விண்ணப்பிக்க வேண்டும். சரிபார்ப்புஇத்திட்டத்தில் விண்ணப்பிக்கும் நிலையிலேயே, சம்பந்தப்பட்ட விண்ணப்பத்துக்கான வரன்முறை கட்டண விபரம் தெரிய வரும். ஆனால், அதிகபட்ச கட்டணம் விதிக்கப்பட்டதால், பெரும்பாலானோர் விண்ணப்பிக்கவில்லை.இந்நிலையில், வரன்முறை திட்டம், 20௨௦ வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது.

இத்திட்டப்படி, சி.எம்.டி.ஏ.,வில் பெறப்பட்ட விண்ணப்பங்கள், முதல் நிலை ஆய்வு கூட மேற்கொள்ளப்படாமல், கிடப்பில் போடப்பட்டு உள்ளன.இது குறித்து, கட்டுமான துறையினர் கூறியதாவது:வரன்முறை திட்டத்தில், சி.எம்.டி.ஏ.,வில், 1,735 விண்ணப்பங்கள் பெறப்பட்டு உள்ளன. அதில், 35 விண்ணப்பங்கள் மீது மட்டுமே, முதல் நிலை சரிபார்ப்பு நடந்துள்ளது. ஆய்வு செய்ய வேண்டும் மற்ற விண்ணப்பங்கள் தொடர்பான எந்த பணிகளும் நடக்கவில்லை. விண்ணப்பத்தின் அடிப்படையில், சம்பந்தப்பட்ட கட்டடங்களை நேரில் ஆய்வு செய்ய வேண்டும்.இருப்பினும், உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள ஒரு வழக்கை சுட்டிக்காட்டி, வரன்முறை பணிகளை, சி.எம்.டி.ஏ., அதிகாரிகள் கிடப்பில் போட்டுள்ளனர்.

இதனால், விண்ணப்பதாரரும் பாதிக்கப்படுவதோடு, அரசுக்கு வர வேண்டிய வருவாயும் முடங்குகிறது. இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X