24 நாட்களுக்கு பிறகு விடுதலை!| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

24 நாட்களுக்கு பிறகு விடுதலை!

Added : ஜூலை 29, 2020
Share
அன்னூர்:காட்டம்பட்டி ஊராட்சி, முதலிபாளையம் காலனியில், தனியார் பள்ளி ஆசிரியருக்கு, கடந்த 1ம் தேதி கொரோனா தொற்று உறுதியானது. நான்கு கட்ட பரிசோதனையில் காலனியில், 19 பேருக்கு தொற்று உறுதியானது. இதனால் காலனியில் மூன்று வாசல்களும் அடைக்கப்பட்டன.இதில், 117 குடும்பங்களைச் சேர்ந்த, 350 பேர் வெளியே நடமாட தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில், 19 பேரும் சிகிச்சை முடிந்து, குணமாகி வீடு

அன்னூர்:காட்டம்பட்டி ஊராட்சி, முதலிபாளையம் காலனியில், தனியார் பள்ளி ஆசிரியருக்கு, கடந்த 1ம் தேதி கொரோனா தொற்று உறுதியானது. நான்கு கட்ட பரிசோதனையில் காலனியில், 19 பேருக்கு தொற்று உறுதியானது. இதனால் காலனியில் மூன்று வாசல்களும் அடைக்கப்பட்டன.இதில், 117 குடும்பங்களைச் சேர்ந்த, 350 பேர் வெளியே நடமாட தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில், 19 பேரும் சிகிச்சை முடிந்து, குணமாகி வீடு திரும்பியதால், நேற்று முதலிபாளையம் காலனியில், மூன்று வாசல்களிலும் வைக்கப்பட்டிருந்த சீல் அகற்றப்பட்டது.24 நாட்களாக வேலைக்கு செல்ல முடியாமல், வாழ்வாதாரம் இழந்து, தவித்த மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X