இந்தியா

புதுச்சேரி சட்டசபை 31 வரை மூடல்

Added : ஜூலை 29, 2020
Share
Advertisement

புதுச்சேரி : 'கொரோனா தொற்று எதிரொலியாக, புதுச்சேரி சட்டசபை, வரும், 31 வரை மூடப்படும்' என, அறிவிக்கப்பட்டுள்ளது.

சட்டசபையின் பட்ஜெட் கூட்டத் தொடரில் பங்கேற்ற, எதிர்க்கட்சி, எம்.எல்.ஏ., ஜெயபால், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார். தொடர்ந்து, சட்டசபையில் பணியாற்றும், 'வாட்ச் அண்ட் வார்டு' ஊழியருக்கும் தொற்று ஏற்பட்டது.இதையடுத்து, சட்டசபை வளாகம் முழுதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. இரண்டு நாட்கள், சட்டசபை வளாகம் மூடப்பட்டது. முதல்வர், சபாநாயகர் மற்றும் சட்டசபை ஊழியர்கள் அனைவருக்கும், நேற்று முன்தினம், கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

இவர்களில், 'வாட்ச் அண்ட் வார்டு' ஊழியர்கள் இருவர், எம்.எல்.ஏ., ஒருவரின் உதவியாளருக்கு, நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.சட்டசபை செயலர் முனிசாமி செய்திக்குறிப்பு:சட்டசபை காவலர்கள் இருவருக்கும், எம்.எல்.ஏ., உதவியாளர் ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சட்டசபை வளாகத்தில் உள்ள மற்றவர் களுக்கும் தொற்று பரவாமல் தடுக்கும் நோக்கத்தில், சட்டசபை வளாகத்தை வரும், 31 வரை மூடி வைக்கும்படி, சபாநாயகர் உத்தரவிட்டுள்ளார். இதன்படி, சட்டசபை செயலகம் மற்றும் சட்டசபை வளாகத்துக்குள் இயங்கும் மற்ற அலுவலகங்கள் அனைத்தும், 31 வரை மூடப்பட்டு இருக்கும். வழக்கமான அலுவலக பணிகள், 3ம் தேதி திங்கள் கிழமை துவங்கும்.இவ்வாறு, அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X