பொது செய்தி

தமிழ்நாடு

செங்கல் மேல் செங்கல்! மீண்டும் நடக்கிறது கட்டுமானம்:வீடு விலை விசாரணை துவக்கம்

Added : ஜூலை 29, 2020
Share
Advertisement

கோவை:கொரோனாவால் பாதிக்கப்பட்ட இன்ஜினியரிங், டெக்ஸ்டைல் தொழில்கள், மெள்ள மீண்டு வரும் நிலையில், சமீப காலமாக கட்டுமான தொழிலும் சூடுபிடிக்கத் துவங்கியுள்ளது.கோவையில், தனி வீடுகள் மட்டுமல்ல, ஏராளமான அபார்ட்மென்டுகளிலும் வீடுகள் காலியாக உள்ளன. இந்த வீடுகள் மளமளவென விற்பனையாகி வந்த நிலையில்தான், கொரோனா வந்து நுழைந்தது.வெளி மாநில தொழிலாளர்கள், சொந்த ஊர்களுக்கு பயணமாகி விட்டதால், கட்டுமான பணிகள் ஸ்தம்பித்தன. வங்கி கடன்களை செலுத்த வேண்டிய கட்டாயம், கட்டுமான நிறுவனங்களுக்கு ஏற்பட்டுள்ளதால், ஏற்கனவே கட்டிய வீடுகளின் விலை குறையும் என்ற எதிர்பார்ப்பு, பலரிடம் எழுந்துள்ளது.இந்நிலையில், ''கட்டுமானத்துறையில் இயல்பு வாழ்க்கை மெதுவாக அல்ல, வேகமாகவே திரும்பி வருகிறது; வீடுகளின் விலை குறைய வாய்ப்பில்லை,'' என்கிறார், கிரெடாய் அமைப்பின் கோவை கிளை தலைவர் சுரேந்தர் விட்டல்.அவர் கூறியதாவது:மீண்டும் தொழிலை சீரமைத்து நடத்த, தொழில்துறையினர் கடும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இன்ஜினியரிங், டெக்ஸ்டைல்ஸ் மட்டுமல்ல, கட்டுமான தொழிலும் மீண்டு வருகிறது.கோவையின் பொருளாதாரத்தில், ரியல் எஸ்டேட் தொழில் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. இடம், நிலம், வீடு விற்பனை மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பும் சூழல் உருவாகி வருகிறது. கட்டிய வீடுகளுக்கான விசாரணைகள் வரத்தொடங்கி விட்டன.புதிய நம்பிக்கை!மீண்டும் ஒரு முழு ஊரடங்கு சூழல் ஏற்படாது என எதிர்பார்க்கிறோம். நோய் தொற்று ஏற்பட்டாலும், சிகிச்சை அளித்து குணப்படுத்த முடியும் என்ற மருத்துவத்துறையில் ஏற்பட்டுள்ள சமீபகால போக்கு, புதிய நம்பிக்கையை அளிக்கிறது.வெளிமாவட்ட தொழிலாளர்கள், வேலையை தொடங்கியுள்ளனர். அவர்கள் ெஷட் அமைத்து தனியாக தங்குவதால், பாதுகாப்பாகவே இருக்கின்றனர்.கூலி உயர்ந்துள்ளதுகொரோனா பாதுகாப்பு விதிமுறைகளை சொல்லிக் கொடுத்துள்ளோம். ஆட்கள் பற்றாக்குறை இருப்பதால், கூலி உயர்ந்துள்ளது. ஆனால், ஏற்கனவே வீடுகளை பதிவு செய்த வாடிக்கையாளர்கள், ஏற்க மறுக்கின்றனர்.ஏற்கனவே போட்ட ஒப்பந்த அடிப்படையில், வேலையை முடித்துத்தர வலியுறுத்துகின்றனர். வீடு விற்பனையில் மந்தநிலை இருந்தாலும், அதன் மதிப்பில் எந்த மாற்றமும் இல்லை.அவசர தேவைகளுக்கு யாராவது விற்பனை செய்தாலன்றி, கூலி அதிகரித்துள்ளதால், விலை உயரவே வாய்ப்பு இருக்கிறது.இவ்வாறு, அவர் கூறினார்.தற்போது கட்டுமான வேலைகள் குறைவாக நடந்தாலும், கொரோனா தொற்றிலிருந்து விரைவில் விடுபடும்போது, இந்த சிறு துவக்கம் மெள்ள வேகம் பெறும்.நம் ஒவ்வொருவரும், சமூக இடைவெளியை கடைபிடிப்பது, கைகளை அடிக்கடி சோப்பு போட்டு கழுவுவது, மாஸ்க் அணிவது ஆகியவற்றை பின்பற்றினால், கொரோனா ஒழியும்; நம் பழைய கோவை, இன்னும் புதிய உத்வேகத்துடன் திரும்பும்!மீண்டும் ஒரு முழு ஊரடங்கு சூழல் ஏற்படாது என எதிர்பார்க்கிறோம். நோய் தொற்று ஏற்பட்டாலும், சிகிச்சை அளித்து குணப்படுத்த முடியும் என்ற, மருத்துவத்துறையில் ஏற்பட்டுள்ள சமீபகால முன்னேற்றம், புதிய நம்பிக்கையை அளிக்கிறது.'விலை குறைய வாய்ப்பில்லை'கோயம்புத்துார் சிவில் இன்ஜினியர் சங்கத்தின் (கொசினா) தலைவர் குருபிரசாத் கூறுகையில், ''வெளிமாநில தொழிலாளர்களில், 25 சதவீதம் பேர் சொந்த ஊருக்கு திரும்பவில்லை. இங்கேயே தங்கியுள்ளனர். தொடர்ந்து வேலை செய்து வருகின்றனர். வெளிமாவட்டங்களை சேர்ந்தவர்கள் இங்கு வர, பாஸ் கிடைப்பதில் சிரமம் உள்ளது. கட்டுமான தொழிலில் உள்ளவர்கள் பலர், வீடு கட்டுவதை தள்ளி வைத்துள்ளனர். கட்டுமான செலவு அதிகரித்துள்ளதே காரணம். எனவே வீடுகள் விலை குறைய வாய்ப்பு இல்லை,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X