ஓட்டுனர், நடத்துனர்கள் உரிமம் புதுப்பிக்க வாய்ப்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ஓட்டுனர், நடத்துனர்கள் உரிமம் புதுப்பிக்க வாய்ப்பு

Added : ஜூலை 29, 2020
Share
சென்னை : அரசு போக்குவரத்து கழக ஓட்டுனர்கள், நடத்துனர்களின் காலாவதியான உரிமங்களை புதுப்பிக்க, புத்தாக்கப் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. தமிழக அரசு போக்குவரத்து கழக ஓட்டுனர்கள், நடத்துனர்களில் பலர், கொரோனா பரவல் காரணமாக, காலாவதியான உரிமங்களை புதுப்பிக்காமல் உள்ளனர்.இவர்களுக்கு வாய்ப்பு வழங்கும் வகையில், போக்குவரத்து செயலர், போக்குவரத்து கமிஷனரிடம் சிறப்பு அனுமதி

சென்னை : அரசு போக்குவரத்து கழக ஓட்டுனர்கள், நடத்துனர்களின் காலாவதியான உரிமங்களை புதுப்பிக்க, புத்தாக்கப் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

தமிழக அரசு போக்குவரத்து கழக ஓட்டுனர்கள், நடத்துனர்களில் பலர், கொரோனா பரவல் காரணமாக, காலாவதியான உரிமங்களை புதுப்பிக்காமல் உள்ளனர்.இவர்களுக்கு வாய்ப்பு வழங்கும் வகையில், போக்குவரத்து செயலர், போக்குவரத்து கமிஷனரிடம் சிறப்பு அனுமதி பெற்றுள்ளார். அதன்படி, ஓட்டுனர், நடத்துனர்களுக்கு கிளைகளில் புத்தாக்கப் பயிற்சி அளித்து, ஆர்.டி.ஓ.,அலுவலகங்களில், லைசென்ஸ் பெற அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.

லைசென்ஸ் காலாவதியான, அரசு விரைவு போக்குவரத்து கழக ஓட்டுனர்கள், நடத்துனர்கள் அருகில் உள்ள, சகோதர போக்குவரத்து கழக கிளைகளில் உள்ள பயிற்சி மையங்களில் புத்தாக்கப் பயிற்சி பெறலாம்.ஆகஸ்டுக்குள் உரிமம் காலாவதியாகும் ஓட்டுனர், நடத்துனர்களும், இப்பயிற்சியில் பங்கேற்று, லைசென்ஸ் பெறலாம்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X