பொது செய்தி

தமிழ்நாடு

தொழில் நிறுவனங்கள் மீண்டு வருகின்றன

Added : ஜூலை 29, 2020
Share
Advertisement

கோவை;மத்திய அரசு அறிவித்துள்ள 'தற்சார்பு இந்தியா' திட்டத்தில், குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கான வாய்ப்புகள் மற்றும் சவால்கள் குறித்து, இணையவழி கலந்துரையாடல் நிகழ்ச்சி நேற்று நடந்தது.'தி அசோசியேடெட் சேம்பர்ஸ் ஆப் காமர்ஸ் அண்ட் இண்டஸ்ட்ரி ஆப் இந்தியா' சார்பில் நடந்த நிகழ்ச்சியில், நாட்டின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த தொழில்முனைவோர், எம்.எஸ்.எம்.இ., துறை அதிகாரிகள் கருத்துகள் தெரிவித்தனர்.'கொடிசியா' தலைவர் ராமமூர்த்தி பேசியதாவது:குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் வளர்ச்சிக்கு மத்திய அரசு பல்வேறு திட்டங்களை வகுத்து வருவது வரவேற்கத்தக்கது. கொரோனா ஊரடங்கால் பல்வேறு சிரமங்களை சந்தித்த தொழில் நிறுவனங்கள், தற்போது படிப்படியாக மீண்டு வருகின்றன. ஊழியர்களையும் காப்பாற்றி, உற்பத்திக்கும் முக்கியத்துவம் அளித்து வருகிறோம்.இப்படிப்பட்ட சூழலில், வங்கிகளில் கடன் தவணை செலுத்துவதற்கான கால அவகாசத்தை, அடுத்தாண்டு மார்ச் வரை, அரசு நீட்டிக்க வேண்டும். வட்டிக்கு வட்டி விதிக்கக்கூடாது.மாவட்டம் தோறும் திறன் மேம்பாட்டு மையங்களை நிறுவுவதன் வாயிலாக, தொழில் நிறுவனங்களின் வளர்ச்சியை ஊக்குவிக்க முடியும்.இவ்வாறு, அவர் பேசினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X