பொது செய்தி

தமிழ்நாடு

இரு பெண் குழந்தைகள் இருந்தால் ரூ.25 ஆயிரம்!

Added : ஜூலை 29, 2020
Share
Advertisement

கோவை:இரண்டு பெண் குழந்தைகள் பாதுகாப்பு உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ், விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.இத்திட்டத்தில், ஒரே பெண் குழந்தையுடன் அறுவை சிகிச்சை செய்துகொள்ளும் தம்பதியரின் குழந்தைக்கு, உதவித்தொகையாக 50,000 ரூபாயும், இரண்டு பெண் குழந்தைகளுடன் அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்களின் குழந்தைகளுக்கு, தலா, 25 ஆயிரம் ரூபாயும் வழங்கப்பட்டு வருகிறது.இரு பெண் குழந்தைகள் இருப்பின், இரண்டாவது குழந்தைக்கு, 3 வயது பூர்த்தியடைவதற்கு முன்பு, கருத்தடை சிகிச்சை செய்து விண்ணப்பிக்க வேண்டும். தாய், 35 வயதுக்குள் அறுவை சிகிச்சை செய்திருக்க வேண்டும். ஆண்டு வருமானம், 72 ஆயிரம் ரூபாய்க்கு மிகாமல் இருப்பது அவசியம். தகுதியுடையவர்கள், பெற்றோர் இருவரின் வயது சான்றிதழ், சாதி சான்றிதழ், குழந்தைகளின் பிறப்பு சான்றிதழ், இருப்பிட சான்று, குடும்ப பாஸ்போர்ட் புகைப்படம், ஆகியவற்றை விண்ணப்பத்துடன் இணைத்து சமர்ப்பிக்க வேண்டும்.சான்றிதழ்களுடன், இ-சேவை மையங்களில் பதிவேற்றம் செய்ய வேண்டும். கூடுதல் விபரங்களுக்கு, வட்டார வளர்ச்சி அலுவலகங்களில் பணிபுரியும் சமூகநல விரிவு அலுவலர்களை அணுகலாம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X