பொது செய்தி

தமிழ்நாடு

இரவு, 9:00 மணி வரை கடைகள் திறக்க அனுமதி?

Added : ஜூலை 29, 2020
Share
Advertisement

சென்னை : 'முழு தளர்வுகளுடன், இரவு, 9:00 மணி வரை கடைகள் நடத்த அனுமதி வழங்க வேண்டும்' என, வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் தலைவர், ஏ.எம்.விக்கிரமராஜா, தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்து உள்ளார்.

இது குறித்து, நேற்று அவர் விடுத்துள்ள அறிக்கை:தமிழகத்தில், 125 நாட்களுக்கும் மேலான ஊரடங்கு காலத்தில், அரசின் அறிவிப்புகள், ஆணைகளுக்கு இணங்க, வணிகர் சங்கங்களின் பேரமைப்பு, வணிகர்களை ஒருங்கிணைத்து, வைரஸ் தொற்று மீட்பு நடவடிக்கைகளுக்கு, அரசுக்கு ஆதரவு அளித்து வருகிறது.அரசின் ஆணைகளுக்கு, வணிகர்கள் அடங்கினாலும், அவர்களின் வயிற்று பசி அடங்கவில்லை. அரசு பல்வேறு தளர்வுகளை அறிவித்து, பல தரப்பு வணிகங்களையும் திறந்து, நடத்துவதற்கு வழிமுறைகளையும், கால நேரத்தையும் அறிவித்தது.அதன்படி, வணிக நிறுவனங்கள் இயங்க துவங்கியுள்ளன.

இருப்பினும், சென்னை கோயம்பேடு மார்க்கெட், திருச்சி, வேலுார் போன்ற மாவட்டங்களில் உள்ள மீன், இறைச்சி மார்க்கெட்டுகள், இன்னும் முழுவதுமாக திறக்கப்படவில்லை.அந்த தொழில்களை நம்பியுள்ள வணிகர்கள், தொழிலாளர்களின் வாழ்வாதாரம் முடக்கப்பட்டு உள்ளது. ஊரடங்கு நீட்டிப்பு, விலைவாசி உயர்வுக்கும், மக்களின் மன அழுத்தத்திற்கும் துாண்டுதலாக அமைந்து விடும் என்பதை, அரசு கவனத்தில் எடுத்து கொள்ள வேண்டும். ஊரடங்கில் முழு தளர்வுகளுடன், இரவு, 9:00 மணி வரை கடைகள் நடத்த அனுமதி வழங்க வேண்டும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X