பொது செய்தி

தமிழ்நாடு

லேப் டெக்னீசியன் நியமிக்கும் பணி துரிதம்

Added : ஜூலை 29, 2020
Share
Advertisement

கோவை:கோவை மாநகராட்சி பகுதியில், தினமும், 100 இடங்களில், மருத்துவ முகாம் நடத்தப்படுகிறது. பரிசோதனைக்கு வருவோரில், அறிகுறி தென்படுவோரிடம் சளி, ரத்த மாதிரி சேகரிக்கப்படுகிறது.இதுதவிர, தொற்று உறுதி செய்த இடங்களில், குடும்ப உறுப்பினர்கள் மற்றும் தொடர்பில் இருந்தவர்களுக்கு மாதிரி சேகரிக்க, லேப் டெக்னீசியன்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.மாநகராட்சியில், 29 லேப்-டெக்னீசியன்களே இருக்கின்றனர். ஆனால், 100 இடங்களில் முகாம் நடத்தும்போது, அதற்கான ஊழியர்கள் இல்லை. அதனால், அனைத்து முகாம்களிலும் 'லேப் டெக்னீசியன்' பணியில் இருக்க வேண்டும். தேவையான எண்ணிக்கையில், தொகுப்பூதியத்தில், தற்காலிகமாக பணியமர்த்த, மாநகராட்சி கமிஷனர் ஷ்ரவன்குமார் அறிவுறுத்தியுள்ளார். அதன்படி, 'லேப் டெக்னீசியன்' நியமிக்கும் பணியில், மாநகராட்சி சுகாதாரப் பிரிவினர் ஈடுபட்டு வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X