பொது செய்தி

தமிழ்நாடு

மங்குழி சாலையில் சேதமடைந்த பாலத்தை சீரமைக்க வேண்டும்

Added : ஜூலை 29, 2020
Share
Advertisement
 மங்குழி சாலையில் சேதமடைந்த பாலத்தை சீரமைக்க வேண்டும்

கூடலுார்:'கூடலுார் அருகே, மங்குழி - சாலையில், சேதமடைந்த பாலத்தை சீரமைக்க வேண்டும்,' என, வலியுறுத்தப்பட்டுள்ளது.கூடலுார் பகுதியில், கடந்த ஆக., மாதம் பெய்த பலத்த மழையின் போது, வீடுகள், சாலைகள், பாலங்கள் சேதமடைந்தன.மங்குழி ஆற்றில் ஏற்பட்ட மழை வெள்ளத்தில், மரப்பாலம் - மங்குழி சாலையில், பகவதி அம்மன் கோவில் அருகே உள்ள, பாலத்தை தாங்கி நிற்கும் கருங்கற்கள் இடிந்து விழுந்து சேதமடைந்தது. தற்போது, அந்த பாலத்தில் சிறிய வாகனங்கள் மட்டுமே கடந்து செல்ல முடிகிறது.கனரக வாகனங்கள் அதனை கடந்து செல்ல முடியாத நிலை உள்ளது.
தற்போது மழை பெய்து வரும் நிலையில், பாலம் சீரமைக்க நடவடிக்கை எடுக்காததால் மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.மக்கள் கூறுகையில், 'கடந்த ஆண்டு பருவ மழையின் போது சேதமடைந்த பாலம் இதுவரை சீரமைக்கப்படவில்லை. இதனால், தற்போதைய மழையில், மீண்டும் பாதிப்பு ஏற்பட்டால், போக்குவரத்து துண்டிக்கும் அபாயம் உள்ளது. எனவே, பருவமழைக்கு முன் பாலத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X