விவசாயி உள்ளிட்ட இருவருக்கு வலை| Dinamalar

விவசாயி உள்ளிட்ட இருவருக்கு வலை

Added : ஜூலை 29, 2020 | |
போத்தனூர்:நெடுஞ்சாலை துறை இளநிலை பொறியாளரை, கொல்ல முயன்ற இருவரை போலீசார் தேடுகின்றனர்.கோவை மாவட்ட நெடுஞ்சாலை துறை, நபார்டு மற்றும் கிராம சாலை பிரிவு, 1ல் இளநிலை பொறியாளராக இருப்பவர் சுப்ரமணி, 57. மலுமிச்சம்பட்டி செல்லும் வழியில், சாலை அமைக்கும் பணியை பார்வையிட, 25ம் தேதி காலை சுப்ரமணி சென்றார்.அப்போது இருவர் ரோடு ரோலர் வாகன டிரைவரை, வாகனத்தை ஓட்ட விடாமல் தடுத்ததுடன்,

போத்தனூர்:நெடுஞ்சாலை துறை இளநிலை பொறியாளரை, கொல்ல முயன்ற இருவரை போலீசார் தேடுகின்றனர்.கோவை மாவட்ட நெடுஞ்சாலை துறை, நபார்டு மற்றும் கிராம சாலை பிரிவு, 1ல் இளநிலை பொறியாளராக இருப்பவர் சுப்ரமணி, 57. மலுமிச்சம்பட்டி செல்லும் வழியில், சாலை அமைக்கும் பணியை பார்வையிட, 25ம் தேதி காலை சுப்ரமணி சென்றார்.அப்போது இருவர் ரோடு ரோலர் வாகன டிரைவரை, வாகனத்தை ஓட்ட விடாமல் தடுத்ததுடன், தகாத வார்த்தைகளால் திட்டி தாக்கினர். சுப்ரமணி, அவர்களை தடுக்க முற்பட்டார். அவரையும் தகாத வார்த்தைகளால் திட்டி, கழுத்தை நெறித்தனர். அங்கிருந்த தொழிலாளர்கள், இருவரையும் விலக்கி, சுப்ரமணியை மீட்டனர். அங்கு வந்த போலீசார், சுப்ரமணியை மருத்துவமனைக்கு அனுப்பினர்.அவரது புகாரின்படி, அப்பகுதியை சேர்ந்த விவசாயி பாலு, 42 மற்றும் சாந்தகுமார், 35 ஆகியோர் மீது, செட்டிபாளையம் போலீசார், கொலை முயற்சி, அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தல், தாக்குதல் உள்பட நான்கு பிரிவுகளில், வழக்கு பதிவு செய்தனர். தப்பியோடிய இருவரை தேடுகின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X