சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சூதாட்டத்தில் ஈடுபட்ட நடிகர் உட்பட 13 பேர் கைது

Added : ஜூலை 29, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
சென்னை : அடுக்கு மாடி குடியிருப்பில், சூதாட்டத்தில் ஈடுபட்ட, நடிகர் ஷாம் உட்பட, 13 பேரை போலீசார் கைது செய்தனர். இயற்கை, உள்ளம் கேட்குமே உள்ளிட்ட பல படங்களில், நாயகனாக நடித்தவர் ஷாம், 44. இவர், நேற்று முன்தினம் இரவு, நுங்கம்பாக்கம், ஸ்டெர்லிங் சாலையில் உள்ள அடுக்கு மாடி குடியிருப்பில், தன் நண்பர்களுடன் சூதாட்டத்தில் ஈடுபட்டு உள்ளார்.இதுகுறித்து, போலீஸ் கமிஷனர்
 சூதாட்டத்தில் ஈடுபட்ட  நடிகர் உட்பட 13 பேர் கைது

சென்னை : அடுக்கு மாடி குடியிருப்பில், சூதாட்டத்தில் ஈடுபட்ட, நடிகர் ஷாம் உட்பட, 13 பேரை போலீசார் கைது செய்தனர்.

இயற்கை, உள்ளம் கேட்குமே உள்ளிட்ட பல படங்களில், நாயகனாக நடித்தவர் ஷாம், 44. இவர், நேற்று முன்தினம் இரவு, நுங்கம்பாக்கம், ஸ்டெர்லிங் சாலையில் உள்ள அடுக்கு மாடி குடியிருப்பில், தன் நண்பர்களுடன் சூதாட்டத்தில் ஈடுபட்டு உள்ளார்.இதுகுறித்து, போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சூதாட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்ய, நுங்கம்பாக்கம் உதவி கமிஷனருக்கு, போலீஸ் உயர் அதிகாரிகள் உத்தரவிட்டனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற உதவி கமிஷனர், நடிகர் ஷாம் உட்பட, 13 பேரை கைது செய்தனர். பின், அனைவரும் காவல் நிலைய ஜாமினில் விடுவிக்கப்பட்டனர். நடிகர் ஷாம் சூதாட்ட வழக்கில் கைது செய்யப்பட்டது, சினிமா துறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
திராவிஷ கிருமி - ராமசாமிநாயக்கன்பாளையம் ,இந்தியா
01-ஆக-202021:04:29 IST Report Abuse
திராவிஷ கிருமி இந்த சூதாடியோட பேரு சம்சுதீன் இப்ராஹிம் என்ற... முகாபுலா மூர்க்க தப்ளிக்கி... என்பது குறிப்பிடத்தக்கது... கவனிக்கத்தக்கது...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X