சென்னை : அடுக்கு மாடி குடியிருப்பில், சூதாட்டத்தில் ஈடுபட்ட, நடிகர் ஷாம் உட்பட, 13 பேரை போலீசார் கைது செய்தனர்.
இயற்கை, உள்ளம் கேட்குமே உள்ளிட்ட பல படங்களில், நாயகனாக நடித்தவர் ஷாம், 44. இவர், நேற்று முன்தினம் இரவு, நுங்கம்பாக்கம், ஸ்டெர்லிங் சாலையில் உள்ள அடுக்கு மாடி குடியிருப்பில், தன் நண்பர்களுடன் சூதாட்டத்தில் ஈடுபட்டு உள்ளார்.இதுகுறித்து, போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சூதாட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்ய, நுங்கம்பாக்கம் உதவி கமிஷனருக்கு, போலீஸ் உயர் அதிகாரிகள் உத்தரவிட்டனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற உதவி கமிஷனர், நடிகர் ஷாம் உட்பட, 13 பேரை கைது செய்தனர். பின், அனைவரும் காவல் நிலைய ஜாமினில் விடுவிக்கப்பட்டனர். நடிகர் ஷாம் சூதாட்ட வழக்கில் கைது செய்யப்பட்டது, சினிமா துறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE