சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சூலூரில் டிரைவர் அடித்து கொலை

Added : ஜூலை 29, 2020
Share
Advertisement

சூலூர்:சூலூர் மார்க்கெட் ரோடு, கொங்காளம்மன் கோவில் வீதியை சேர்ந்த மாசானம்,33, அப்பநாயக்கன்பட்டியை சேர்ந்த சக்திவேல், 30, ராசிபாளையத்தை சேர்ந்த தட்சிணாமூர்த்தி, 24; மூவரும் நண்பர்கள். மதுவுக்கு அடிமையானவர்கள். 15 நாட்களுக்கு முன், மாசானத்திடம், ரூ.3,500 சக்திவேல் வாங்கியுள்ளார். திருப்பித்தர தாமதமானதால், அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.சக்திவேலின் மனைவியை தகாத வார்த்தைகளில், மாசானம் பேசியதாக கூறப்படுகிறது. சக்திவேல், தட்சிணாமூர்த்தியுடன் சேர்ந்து நேற்று முன்தினம் இரவு, மாசானத்தை இரும்பு கம்பியால் தாக்கி கொலை செய்தார். வழக்குப்பதிவு செய்த சூலூர் போலீசார் சக்திவேல், தட்சிணாமூர்த்தியை கைது செய்து விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X