சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தீக்குளிக்க முயன்ற ஓய்வு சிறப்பு எஸ்.ஐ.,

Added : ஜூலை 29, 2020
Share
Advertisement

கம்பம் : தேனி மாவட்டம் கூடலுார் தெற்கு ஸ்டேஷனில் சிறப்பு எஸ்.ஐ., யாக வேலை செய்து விருப்ப ஓய்வு பெற்றவர் ஆரோக்கியசாமி 65.

கம்பம் மணிநகரில் வசித்து வருகிறார்.இவரது மகன் நிர்மல் பலரிடம் கடன் பெற்று வெளியூர் சென்று விட்டார். கடன் கொடுத்தவர்கள் தன்னை மிரட்டுவதாக ஆரோக்கியசாமி ஜூலை 18 ல் கம்பம் தெற்கு போலீசில் புகார் கொடுத்தார். விசாரித்த இன்ஸ்பெக்டர் கீதா கடன் கொடுத்தவர்களிடம் ஆரோக்கியசாமிக்கு நெருக்கடி கொடுக்கக்கூடாது என பேசி அனுப்பி விட்டார். இந்நிலையில் கடன் கொடுத்தவர்கள் நெருக்கடி கொடுப்பதாகக்கூறி நேற்று போலீஸ் ஸ்டேஷன் முன் ஆரோக்கியசாமி உடலில் மண்ணெண்ணை ஊற்றி தீக்குளிக்க முயன்றார். டி.எஸ்.பி., சின்னகண்ணு நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்து அனுப்பினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X