பொது செய்தி

தமிழ்நாடு

ரஜினி 'இ - பாஸ்' பெற்றது எங்கே? சென்னை மாநகராட்சி கமிஷனர் விளக்கம்

Updated : ஜூலை 29, 2020 | Added : ஜூலை 29, 2020 | கருத்துகள் (22)
Share
Advertisement
Rajini, Rajinikanth's E-Pass, chennai news, Rajinikanth,
ரஜினி,இ பாஸ்

சென்னை : ''இறப்பு மற்றும் மருத்துவ சிகிச்சைக்கு முக்கியத்துவம் கொடுத்து 'இ - பாஸ்' வழங்கப்பட்டு வருகிறது. நடிகர் ரஜினி செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகத்திடம் 'இ - பாஸ்' பெற்றுள்ளார்'' என சென்னை மாநகராட்சி கமிஷனர் பிரகாஷ் கூறினார்.

சென்னையில் கொரோனா குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அதிநவீன மின்னணு வீடியோ விழிப்புணர்வு வாகனங்களை மாநகராட்சி கமிஷனர் பிரகாஷ் ரிப்பன் மாளிகையில் நேற்று துவக்கி வைத்தார். அதன்பின் அவர் அளித்த பேட்டி:சென்னையில் தினமும் 12 ஆயிரம் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதுவரை 23 ஆயிரம் காய்ச்சல் முகாம்கள் நடத்தப்பட்டதில் 14 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் பயனடைந்துள்ளனர்.


latest tamil news



வீடு வீடாக சென்று களப்பணியாளர்கள் ஆய்வு செய்து வருகின்றனர். அப்போது யாருக்காவது மூச்சு திணறல் அறிகுறி இருந்தால் அவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யாமலேயே உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது. அதன்பின் கொரோனா பரிசோதனை செய்யப்படும்.இவ்வாறு களப்பணியாளர்கள் வாயிலாக கண்டறியப்படும் 20 நபர்கள் வரை தினமும் மருத்துவமனைகளில் அனுமதித்து வருகிறோம். இதற்காக அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் சிறப்பு வார்டு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இதுபோன்ற நடவடிக்கையால் 0.3 சதவீதம் வரை இறப்பு விகிதத்தை குறைக்க முடியும். மக்களிடையே விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது; 95 சதவீதம் பேர் வரை முகக் கவசம் அணிகின்றனர்.திருமழிசை தற்காலிக மார்க்கெட்டில் கூடுதல் வசதி செய்து தர சி.எம்.டி.ஏ. அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இறப்பு மற்றும் மருத்துவ சிகிச்சைக்கு செல்வோருக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து 'இ - பாஸ்' வழங்கப்படுகிறது.

நடிகர் ரஜினி செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகத்திடம் இருந்து 'இ - பாஸ்' பெற்று காரில் பயணம் செய்தது ஆய்வில் தெரிய வந்துள்ளது.இவ்வாறு பிரகாஷ் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (22)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Raj - nellai,இந்தியா
29-ஜூலை-202015:53:55 IST Report Abuse
Raj சரி விடுங்க சார் .சிஸ்டம் சரி பண்ண பண்ணை வீட்டுக்கு அவசரமாக போயிருப்பார்
Rate this:
Cancel
PR Makudeswaran - Madras,இந்தியா
29-ஜூலை-202013:07:57 IST Report Abuse
PR Makudeswaran அரசியல்வாதி செய்தால் எல்லாம் உடனே பாவம் மக்கள் மருத்துவ காரணம் காட்டி பாஸ் ஆனால் ஒரு மண்ணாங்கட்டி ஐயும் இல்லை.
Rate this:
Cancel
Parthasarathy Badrinarayanan - jakarta,இந்தோனேசியா
29-ஜூலை-202012:15:49 IST Report Abuse
Parthasarathy Badrinarayanan உதயநிதி எப்படி சாத்தான் குளம் போனார் ? யார் விசாரிப்பது ?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X