பொது செய்தி

தமிழ்நாடு

'விஸ்வாசம்' நடிகைக்கு குவியும் நிதி

Added : ஜூலை 29, 2020
Share
Advertisement

சிவகங்கை : சிவகங்கை அருகே ஒக்கூரில் வசிக்கும் 'விஸ்வாசம்' பட துணை நடிகை சந்திரகிரி 73, க்கு தினமலர் நாளிதழ் செய்தி எதிரொலியால் நிதி உதவி குவிந்து வருகிறது.

இவர், 2012 முதல் 2018 வரை விஸ்வாசம், இருடியம், சுந்தரபாண்டியன் உள்பட30 படங்களில் நடித்துள்ளார். 2019 ஜன., 4ல் கீழே விழுந்து கால் முறிந்தது. நடக்க முடியாத நிலையில் ஊரடங்கும் அமலானதால் வருவாய் இன்றி தவித்தார். இது குறித்து ஜூலை 26 ல் தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது.குவியும் உதவிஅவர் கூறியதாவது: தினமலர் நாளிதழ் செய்தியால் சிவகங்கை எம்.பி., கார்த்தி, பச்சேரி சுந்தர்ராஜன் அரிசி, பருப்பு, டேபிள் பேன், பாய், தலையணை, வாளி, குடம், மாஸ்க், பிளாஸ்க் உள்ளிட்ட பொருட்கள் மற்றும் ரூ.10 ஆயிரம் நிதி வழங்கினர்.

சென்னை, விழுப்புரம், ஈரோடு, திருப்பூர், மற்றும் புதுச்சேரியில் இருந்தும் பலர் ரூ.30 ஆயிரத்து 500 வரை வழங்கினர். என் சிரமத்தை செய்தியாக வெளியிட்டு உதவிய தினமலர் நாளிதழுக்கு நன்றி, என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X