பொது செய்தி

தமிழ்நாடு

தங்கம் விலை தொடர் உச்சம்

Added : ஜூலை 29, 2020
Share
Advertisement

சென்னை : தமிழகத்தில், நேற்றும், ஆபரண தங்கம் விலை சவரனுக்கு, 192 ரூபாய் அதிகரித்தது.

உலகின் பல நாடுகளில், பொருளாதாரம் பாதிக்கப்பட்டு உள்ளதால், முதலீட்டாளர்கள் பாதுகாப்பு கருதி, தங்கத்தில், பெருமளவு முதலீடு செய்து வருகின்றனர். இதனால், அதன் விலை எப்போதும் இல்லாத வகையில், தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தமிழகத்தில், நேற்று முன்தினம், 22 காரட் ஆபரண தங்கம், கிராம், 5,013 ரூபாய்க்கும்; சவரன், 40 ஆயிரத்து, 104 ரூபாய்க்கும் விற்பனையானது. இதுவே, தங்கம் விற்பனையில் உச்ச விலையாக கருதப்பட்டது. கிராம் வெள்ளி, 70.90 ரூபாயாக இருந்தது.

இந்நிலையில், நேற்று தங்கம் கிராமுக்கு, 24 ரூபாய் உயர்ந்து, 5,037 ரூபாய்க்கு விற்பனையானது. சவரனுக்கு, 192 ரூபாய் அதிகரித்து, 40 ஆயிரத்து, 296 ரூபாய் என்ற புதியஉச்சத்தை எட்டியது. வெள்ளி விலையும் கிராமுக்கு, 2 ரூபாய் உயர்ந்து, 72.90 ரூபாய்க்கு விற்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X