4 மாவட்டங்களுக்கு கன மழை எச்சரிக்கை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

4 மாவட்டங்களுக்கு கன மழை எச்சரிக்கை

Added : ஜூலை 29, 2020
Share

சென்னை : நான்கு மாவட்டங்களில், இன்று மிக கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

இது குறித்து, மையத்தின் இயக்குனர், புவியரசன் வெளியிட்ட அறிவிப்பு:நீலகிரி, கோவை, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, மதுரை மற்றும் சிவகங்கை மாவட்டங்களில், இன்று ஓரிரு இடங்களில் கன மழை பெய்யும்.தேனி, திண்டுக்கல், விருதுநகர், தென்காசி மாவட்டங்களில், ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் மிக கன மழையும், மற்ற இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யும்.கேரள கடலோரம், லட்சத்தீவு மற்றும் மாலத்தீவு பகுதிகளில், மணிக்கு, 50 கி.மீ., வேகத்தில் சூறாவளி காற்று வீசும்.

மத்திய மேற்கு மற்றும் தென்மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்றும் வீசுவதால், வரும், 31ம் தேதி வரை, அந்த பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X