சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வனத்துறை விசாரணையில் இறப்பு 6 நாளாகியும் உடலை வாங்க மறுப்பு

Added : ஜூலை 29, 2020
Share
Advertisement

திருநெல்வேலி : தென்காசியில் வனத்துறை விசாரணையில் இறந்தவர் உடலை நேற்று 6வது நாளாக குடும்பத்தினர் பெற்றுக்கொள்ளவில்லை.

தென்காசி மாவட்டம் கடையம் அருகே வாகைகுளத்தை சேர்ந்தவர் விவசாயி அணைக்கரைமுத்து 76. தோட்டத்தில் பாதுகாப்பிற்கு மின்வேலி அமைத்திருந்தார்.அனுமதி பெறாததால் மின்துறை வனத்துறையினர் அவரை ஜூலை 22ல் கடையம் வனத்துறை அலுவலகத்திற்கு அழைத்துச் சென்றனர்.அங்கு அவர் மயங்கி விழுந்து இறந்தார். உடல் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்து. தாக்கப்பட்டதால் அவர் இறந்தார் என குடும்பத்தினர் புகார் செய்தனர்.

குடும்பத்திற்கு 10 லட்சம் ரூபாய் நிவாரணம் ஒருவருக்கு வேலை என அரசு அறிவித்தது. அவரது மனைவி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார். வனத்துறையினர் மீது கொலை வழக்குபதிவு செய்யக்கோரி சம்பவம் நடந்து 6 நாட்களாகியும் அவரது உடலை வாங்கவில்லை.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X