பொது செய்தி

இந்தியா

கர்ப்பத்தில் உள்ள சிசுவுக்கும் பரவிய 'கொரோனா' வைரஸ்

Added : ஜூலை 29, 2020
Share
Advertisement

புனே : மஹாராஷ்டிர மாநிலம் புனேயில், கர்ப்பிணி பெண்ணின் மூலம், கருவில் இருந்த சிசுவுக்கும், 'கொரோனா' வைரஸ் பரவியுள்ளது. இவ்வாறு வைரஸ் பரவுவது, நம் நாட்டில் முதல் முறையாக பதிவாகியுள்ளது.

மஹாராஷ்டிராவில், முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையிலான, சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கூட்டணி அரசு அமைந்துள்ளது. மாநிலத்தின் புனேயில் உள்ள சாசூன் பொது மருத்துவமனையில் பிறந்த குழந்தைக்கு, கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது தெரிய வந்துள்ளது.பரிசோதனைஇது குறித்து, டாக்டர்கள் கூறியதாவது:வழக்கமாக, ஒருவருடன் நெருங்கி பழகும்போது தான், கொரோனா வைரஸ் பரவுகிறது.

பாலுாட்டுவது உள்ளிட்டவை மூலம், பிறந்த குழந்தைக்கு, தாயிடம் இருந்து பரவுவதற்கு வாய்ப்புள்ளது.ஆனால், கர்ப்பிணி பெண்ணின் மூலம், அவருடைய வயிற்றில் இருந்த சிசுவுக்கும் கொரோனா வைரஸ் பரவியுள்ளது. இந்த வகையில், வைரஸ் பரவும் சம்பவம் நடப்பது, நம் நாட்டில் முதல் முறையாகும்.அந்த கர்ப்பிணியின் நச்சுக்கொடி வழியாக, சிசுவுக்கு வைரஸ் பரவியுள்ளது, பரிசோதனையில் தெரிய வந்தது. குழந்தை பிறப்பதற்கு, ஒரு வாரத்திற்கு முன், அந்த பெண்ணுக்கு, வைரஸ் அறிகுறிகள் தென்பட்டன. பரிசோதனையில், அவருக்கு வைரஸ் பாதிப்பு இல்லை என்பது தெரிய வந்தது.

மூச்சுத் திணறல் : அதே நேரத்தில், பிறந்த உடனேயே பரிசோதனை செய்ததில், அந்தக் குழந்தைக்கு வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதியானது. அந்தக் குழந்தைக்கு மூச்சுத் திணறல் உட்பட பிரச்னைகள் ஏற்பட்டன. தீவிர சிகிச்சைக்குப் பின், தாயும், சேயும் குணமடைந்து, வீடு திரும்பினர்.தாய்க்கு வைரஸ் தொற்று இல்லாத நிலையிலும், தாயின் மூலம், கர்ப்பத்தில் இருக்கும் சிசுவுக்கு வைரஸ் பரவலாம் என்பது, இதன் மூலம் தெரிய வந்து உள்ளது. இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X