பொது செய்தி

தமிழ்நாடு

'கொரோனா' சிகிச்சை சிறப்பு மையங்கள்: கூடுதலாக அமைக்கும் பணி 'விறுவிறு'

Added : ஜூலை 29, 2020
Share
Advertisement

கோவை:கோவை, திருச்சி ரோட்டில் உள்ள திருமண மண்டபத்தில், 'கொரோனா' சிகிச்சை சிறப்பு மையம் அமைக்க, மாநகராட்சி கமிஷனர் ஷ்ரவன்குமார் நேற்று, ஆய்வு மேற்கொண்டார்.கடந்த சில நாட்களாக, 300க்கும் மேற்பட்டோருக்கு, தொற்று உறுதியாகிறது; அதே போல், அதிக எண்ணிக்கையில் குணமாகி, 'டிஸ்சார்ஜ்' செய்யப்படுவதால், தற்போதைக்கு சிக்கல் இல்லாத நிலை காணப்படுகிறது.வரும் நாட்களில், 'டிஸ்சார்ஜ்' செய்யப்படுவோர் எண்ணிக்கை குறைந்து, 'அட்மிட்' செய்யப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்தால், சிகிச்சை அளிக்க முடியாத, நெருக்கடியான சூழல் உருவாகும். அதனால், மாவட்டம் முழுவதும் தேவையான இடங்களில், சிகிச்சையளிக்க, ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.மாவட்டம் முழுவதும் தயார்!மேட்டுப்பாளையத்தில் தனியார் மருத்துவமனை, கண்ணார்பாளையம் சமுதாய கூடம் மற்றும் தனியார் திருமண மண்டபத்தில், படுக்கை வசதி செய்யப்பட்டுள்ளது. அன்னுார் அருகே பிள்ளையப்பன் பாளையத்தில் உள்ள திருமண மண்டபத்தில், 100 படுக்கை வசதி ஏற்படுத்த முடிவாகியிருக்கிறது. ஜோதிபுரத்தில் தனியார் கல்லுாரியை சிகிச்சை மையமாக மாற்ற, ஆலோசனை நடந்து வருகிறது.இதேபோல், கோவை - திருச்சி ரோட்டில் உள்ள கல்யாண மண்டபம், பாலக்காடு ரோடு மற்றும் பொள்ளாச்சி ரோட்டிலும், தனித்தனி சிகிச்சை மையங்கள் ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. மாநகராட்சி கமிஷனர் ஷ்ரவன்குமார் தலைமையிலான குழுவினர், நேற்று ஆய்வு செய்தனர்.சிகிச்சைக்கு திணறக்கூடாதுமருத்துவத்துறை அதிகாரிகள் கூறியதாவது:சென்னையிலும், கோவையிலும் ஏற்பட்டுள்ள பாதிப்பு வித்தியாசம், ஒரு மாத இடைவெளிதான். பாதிப்பு உச்சம் அடையும்போது, சிகிச்சை அளிக்க திணறக்கூடாது என்பதற்காக, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, புதிய மையங்கள் தயார் செய்யப்படுகின்றன. தனியார் மருத்துவனை டாக்டர்கள் மற்றும் செவிலியர்கள் கொண்ட மருத்துவ குழுவினர், 'கொரோனா' நோயாளிகளுக்கு, சிகிச்சை அளிக்க களமிறக்கப்படுவர்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X