பொது செய்தி

இந்தியா

ஜம்மு -- காஷ்மீரில் மீண்டும் '4ஜி' சேவை

Added : ஜூலை 29, 2020
Share
Advertisement

புதுடில்லி : 'ஜம்மு -- காஷ்மீரில், '4ஜி' இணையதள சேவையை மீண்டும் வழங்குவது குறித்து, லெப்டினன்ட் கவர்னர் மற்றும் பா.ஜ., தலைவர் ராம் மாதவ் கூறிய கருத்துகள் சரிபார்க்கப்படும்' என, உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்தது.

உத்தரவு : ஜம்மு -- காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து, கடந்த ஆண்டு ஆகஸ்டில் ரத்து செய்யப்பட்ட பின், அங்கு, 4ஜி எனப்படும், அதிவேக இணையதள சேவை முற்றிலுமாக நிறுத்தப்பட்டது. அங்கு, படிப்படியாக இயல்பு நிலை திரும்பிய பின், 2ஜி எனப்படும், குறைந்த வேகம் கொண்ட, இணைய சேவை வழங்கப்பட்டது. இந்நிலையில், ஜம்மு -- காஷ்மீரில், 4ஜி இணைய சேவையை மீண்டும் வழங்க உத்தரவிடுமாறு, உச்ச நீதிமன்றத்தில், தன்னார்வ தொண்டு நிறுவனம் மனு செய்தது.

இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், 4ஜி சேவையை மீண்டும் வழங்குவது குறித்து முடிவு செய்ய, மத்திய உள்துறை செயலர் தலைமையில், சிறப்பு குழுவை நியமிக்குமாறு, மே, 11ல் உத்தரவிட்டது.இதற்கிடையே, 'ஜம்மு -- காஷ்மீரில், 4ஜி சேவைக்கான தடை உத்தரவு தொடரும்' என, யூனியன் பிரதேச நிர்வாகம், கடந்த மே, 27ல் தெரிவித்தது. ஆனால், 'ஜம்மு -- காஷ்மீரில், 4ஜி சேவையை மீண்டும் துவக்கலாம்' என, துணை நிலை கவர்னர், ஜி.சி.முர்மு மற்றும் பா.ஜ., தலைவர், ராம் மாதவ் ஆகியோர், சமீபத்தில் கருத்து தெரிவித்தனர்.


அவமதிப்பு வழக்கு : இதையடுத்து, 'நீதிமன்ற உத்தரவை மதிக்காதது குறித்து, மத்திய உள்துறை செயலர் மற்றும் ஜம்மு -- காஷ்மீர் தலைமை செயலரை அழைத்து விளக்கம் கேட்க வேண்டும்' என, தன்னார்வ தொண்டு நிறுவனம் சார்பில், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. இந்த மனு, நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, கவர்னர் மற்றும் பா.ஜ., தலைவரின் கருத்து குறித்து, மனுதாரர் தரப்பில் ஆஜரான, மூத்த வழக்கறிஞர் ஹுஸேபா அகமதி குறிப்பிட்டார்.'அவர்கள் கூறிய கருத்துகள் குறித்து சரிபார்க்கப்படும்' என, மத்திய அரசு சார்பில் ஆஜரான, அட்டர்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால் தெரிவித்தார்.

மேலும், மனுதாரரின் மனுவுக்கு, பதில் மனுதாக்கல் செய்ய, மத்திய அரசு சார்பில், அவகாசம் கோரப்பட்டது.இதையடுத்து, இந்த வழக்கை, அடுத்த மாதம், 7ம் தேதிக்கு, நீதிபதிகள் ஒத்தி வைத்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X