பொது செய்தி

தமிழ்நாடு

கொரோனா தடுப்பு முறையை கடைபிடித்தால் தப்பலாம்

Added : ஜூலை 29, 2020
Share
Advertisement

ராமநாதபுரம்:ராமநாதபுரம் மாவட்டத் தில் நகர் பகுதிகளை போல் கிராமப்பகுதிகளிலும் கொரோனா தொற்று பரவிவருகிறது. இருப்பினும் மக்கள் அச்சப்படாமல் சமூக இடைவெளியை பின்பற்றாமல், முகக்கவசம் அணியாமல்அன்றாட பணிகளை மேற்கொள்கின்றனர்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் இதுவரை 3090க்கு மேற்பட்டவர்கள் கொரோனா தொற்று நோயால் பாதிக்கப்பட்டு உள்ளனர். தினமும் புதிதாக50 முதல் 100 பேர் வரை தொற்றால் பாதிக்கப்படுகின்றனர். முகக்கவசம், சமூக இடைவெளியை பின்பற்ற மாவட்ட நிர்வாகம், போலீசார் வலியுறுத்துகின்றனர். கிராமப்பகுதியில் அச்சமின்றி மக்கள் சமூக இடைவெளியை பின்பற்றாமல் அலட்சியமாக உள்ளனர்.

மகளிர் சுய உதவிக்குழுவினர், தன்னார்வலர்கள் மூலம் வீடு வீடாக சென்று கொரோனா பரவல் விழிப்புணர்வு ஏற்படுத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.இருந்தாலும் ரேஷன் பொருட்கள் வாங்கவும், வங்கிகளில் உதவித்தொகை பெறவும் கூட்டம் கூடுகின்றனர். பஸ் போக்குவரத்து இல்லாததால் சரக்குவாகனம், ேஷர் ஆட்டோவில் கூட்டமாக பயணம் செய்கின்றனர்.முகக்கவசம் அணியாமல், சமூக இடைவெளியை பின்பற்றாமல் செல்பவர்கள் தங்களை பாதுகாத்து கொள்ள தடுப்பு முறைகளை கடைபிடித்து நோயின் தாக்கத்திலிருந்து தப்பலாம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X