பொது செய்தி

தமிழ்நாடு

நிவாரணம் கேட்டு வீடு திரும்பா போராட்டம் :அனைத்து தொழிற்சங்கங்கள் அறிவிப்பு

Added : ஜூலை 29, 2020
Share
Advertisement

கோவை:கொரோனா நிவாரண நிதி கேட்டு, வீடு திரும்பா போராட்டம் நடத்தப்படும் என்று, தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன. கோவை மாவட்ட கட்டுமானம் மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர் சங்க நிர்வாகிகள் கூட்டம், ஏ.ஐ.டி.யு.சி., அலுவலகத்தில், அதன் பொது செயலாளர் செல்வராஜ் தலைமையில் நேற்று நடந்தது.கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:தமிழகத்தில் கொரோனா பாதிப்பால், கடந்த மார்ச்சில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட போது, கட்டட தொழிலார்கள் மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு, 2,000 ரூபாய் நிவாரண நிதி வழங்கப்படும் என முதல்வர் அறிவித்தார்.கோவை மாவட்டத்தில் தகுதி பெற்ற, 40 சதவிகித தொழிலாளர்களுக்கு, நான்கு மாதங்களாகியும் நிவாரண தொகை இன்னும் கிடைக்கவில்லை. அரசு கேட்ட ஆவணங்களை கொடுத்த பிறகும், நிவாரண நிதி கொடுக்காமல் அலைக்கழிக்கின்றனர். ஆக., 10 ம் தேதிக்குள், பதிவு புதுப்பித்த அனைத்து தொழிலாளர்களுக்கும் நிவாரண நிதி வழங்க வேண்டும்.தவறினால், ஆக.,12ல், தொழிற்சங்க நிர்வாகிகள், தொழிலாளர்கள், நல வாரிய அலுவலகத்துக்கு திரண்டு வந்து, நிவாரண தொகை வழங்கப்படும் வரை, வீடு திரும்பா போராட்டம் நடத்தப்படும்.இவ்வாறு, தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.அண்ணா கட்டுமான தொழிற்சங்க பொது செயலாளர் முருகேசன், எல்.பி.எப்., பொது செயலாளர் கிருஷ்ணசாமி, ஏ.ஐ.டி.யு.சி., லேபர் யூனியன் பாலகிருஷ்ணன், ஐ.என்.டி.யு.சி., சிரஞ்சீவி கண்ணன், எச்.எம்.எஸ்.,பொது செயலாளர் மனோகரன், சி.ஐ.டி.யு., பழனிச்சாமி, பி.எம்.எஸ்., முருகேசன் ஆகியோர் பங்கேற்றனர். தமிழகத்தில் கொரோனா பாதிப்பால், கடந்த மார்ச்சில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட போது, கட்டட தொழிலார்கள் மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு, 2,000 ரூபாய் நிவாரண நிதி வழங்கப்படும் என முதல்வர் அறிவித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X