புலிகள் பாதுகாப்பு: அமைச்சர் உறுதி

Updated : ஜூலை 29, 2020 | Added : ஜூலை 29, 2020 | கருத்துகள் (2)
Share
Advertisement
International Tiger Day, Prakash Javadekar, Tiger Census, Environment Minister, Javadekar, Tiger Census report, Tiger Day

புதுடில்லி : ''தேசிய விலங்கான புலிகளை பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. புலிகளை பாதுகாக்கும் நாடுகளுடன் இணைந்து செயலாற்றத் தயாராக உள்ளோம்,'' என, பா.ஜ.,வைச் சேர்ந்த, மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர், பிரகாஷ் ஜாவடேகர் கூறியுள்ளார்.


பிரச்னை


சர்வதேச புலிகள் தினம், இன்று(ஜூலை 29) கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி, நாட்டில் உள்ள, 50 புலிகள் காப்பகங்கள் குறித்த அறிக்கை, நேற்று வெளியிடப்பட்டது.சுற்றுச்சூழல் துறை இணையமைச்சர், பபுல் சுப்ரியோ உள்ளிட்டோர், இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

அறிக்கையை வெளியிட்டு, பிரகாஷ் ஜாவடேகர் கூறியதாவது: கடந்த, 1973ல், நாட்டில், ஒன்பது புலிகள் காப்பகங்களே இருந்தன. தற்போது அது, 50 ஆக உயர்ந்துள்ளது. கடந்த, 2006ல் நாட்டில் புலிகளின் எண்ணிக்கை, 1,411 ஆக இருந்தது. அது, 2019ல், 2,967ஆக உயர்ந்துள்ளது.

உலக அளவில் புலிகள் காப்பகங்களுக்கான நிலத்தில், 2.5 சதவீதம் குறைவாகவே நம்மிடம் உள்ளது. அதேபோல், மழையளவில், 4 சதவீதம் குறைவாகவே பெற்றுள்ளோம். மனித மக்கள்தொகையில், 16 சதவீதம் அதிகம் உள்ளோம். இவ்வளவு பிரச்னைகள் இருந்தபோதும், புலிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.


நடவடிக்கை :


தற்போது உலகெங்கும், இந்தியா உட்பட, 13 நாடுகளே, புலிகளை பாதுகாத்து வருகின்றன. வங்கதேசம், பூட்டான், சீனா, இந்தோனேஷியா, மலேஷியா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகளுடன் இணைந்து, அவற்றுக்கு தலைமை ஏற்று, புலிகள் பாதுகாப்புக்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கத் தயாராக உள்ளோம். இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
babu -  ( Posted via: Dinamalar Android App )
29-ஜூலை-202020:22:16 IST Report Abuse
babu எப்படி 10 புலியை கூண்டுல வச்சிகிட்டு, இருக்கிற காட்டையெல்லாம் வித்துட்டா?
Rate this:
Cancel
குஞ்சுமணி சென்னை - Chennai ,இந்தியா
29-ஜூலை-202002:24:55 IST Report Abuse
குஞ்சுமணி சென்னை தமிழ்நாட்ல புலிகள்ன்னாவே அது வாழ்நாள் முழுக்க உயிருக்கு பயந்து எலிமாதிரி வங்குக்குள் ஒழிந்து ஒழிந்து வாழ்ந்த அந்த மாவீர கோழையத்தான் நினைப்பாங்க
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X