பொது செய்தி

தமிழ்நாடு

'எலக்ட்ரிக் சைக்கிள்' கண்டுபிடித்த ஊழியர்

Added : ஜூலை 29, 2020 | கருத்துகள் (14)
Share
Advertisement
'எலக்ட்ரிக் சைக்கிள்' கண்டுபிடித்த ஊழியர்

ஓசூர் : தனியார் நிறுவன ஊழியர், 12 ஆயிரம் ரூபாய் செலவில், 'எலக்ட்ரிக் சைக்கிள்' உருவாக்கியுள்ளார்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர், ஆவலப்பள்ளி ஹட்கோவை சேர்ந்தவர், பாண்டியராஜன், 45; ஐ.டி.ஐ., படித்த இவர், ஓசூர் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். திருமணமாகி, மகள், மகன் உள்ளனர். சைக்கிளுக்கு புத்துயிர் கொடுக்கும் வகையில், 12 ஆயிரம் ரூபாய் மதிப்பில், எலக்ட்ரிக் சைக்கிள் உருவாக்கியுள்ளார்.

பாண்டியராஜன் கூறியதாவது: பேட்டரியுடன் கூடிய இந்த சைக்கிளை, பெடல் செய்து ஓட்டலாம்; எலக்ட்ரிக் சைக்கிளாகவும் பயன்படுத்தலாம். இரண்டரை மணி நேரம் சார்ஜ் செய்தால், 80 கி.மீ., வரை, 30 கி.மீ., வேகத்தில் செல்லும். 150 கிலோ வரை லோடு ஏற்றினாலும், வேகம் குறையாது.'ஓவர் லோடு' ஏற்றினால், 'டிரிப்' ஆகும் வசதியும், பிரேக் பிடித்தால், ஆப் ஆகும் வசதியும் உள்ளது.

இதேபோல், நான்கு சக்கர வாகனங்களுக்கு, தண்ணீரில் இருந்து ஹைட்ரஜனை பிரித்தெடுத்து, எரிபொருள் ஊக்கியாக மாற்றும் செயல்பாட்டை கண்டுபிடித்துள்ளேன். இதனால் வாகனங்களில் இருந்து, 'கார்பன் மோனாக்சைடு' வராமல் தடுக்கப்படும்.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து (14)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
இந்தியன் kumar - chennai,இந்தியா
04-ஆக-202017:47:28 IST Report Abuse
இந்தியன் kumar ஏழைகளின் பைக் இது
Rate this:
Cancel
Vasudevan Jayaraman - Chennai,இந்தியா
02-ஆக-202016:13:15 IST Report Abuse
Vasudevan Jayaraman இவர் போன்றவர்களை அரசு ஊக்கிவிக்க வேண்டும். மாறாக அவரையே லோன் வாங்க செய்து, உற்பத்தி பண்ண வைத்து, மார்கெட்டிங்கும் பண்ண வைத்து திண்டாட வைத்து விடுவார்கள். நானும் இவர் போன்று ஒருவன் ஆவேன் சாப்ட்வேர் லைனில் . இன்னும் அநேக இந்தியர்கள் இது போல் பெரிய அளவில் போக முடியாமல் தவிக்கிறோம் .
Rate this:
Cancel
chandrasekar - SINGAPORE,சிங்கப்பூர்
02-ஆக-202014:08:29 IST Report Abuse
chandrasekar வண்டி ஓடும் போது பேட்டரி ரீசார்ஜ் ஆகும் படி உருவாக்குங்கள். டயனோமோ கொண்டு.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X