ஓசூர் : தனியார் நிறுவன ஊழியர், 12 ஆயிரம் ரூபாய் செலவில், 'எலக்ட்ரிக் சைக்கிள்' உருவாக்கியுள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர், ஆவலப்பள்ளி ஹட்கோவை சேர்ந்தவர், பாண்டியராஜன், 45; ஐ.டி.ஐ., படித்த இவர், ஓசூர் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். திருமணமாகி, மகள், மகன் உள்ளனர். சைக்கிளுக்கு புத்துயிர் கொடுக்கும் வகையில், 12 ஆயிரம் ரூபாய் மதிப்பில், எலக்ட்ரிக் சைக்கிள் உருவாக்கியுள்ளார்.
பாண்டியராஜன் கூறியதாவது: பேட்டரியுடன் கூடிய இந்த சைக்கிளை, பெடல் செய்து ஓட்டலாம்; எலக்ட்ரிக் சைக்கிளாகவும் பயன்படுத்தலாம். இரண்டரை மணி நேரம் சார்ஜ் செய்தால், 80 கி.மீ., வரை, 30 கி.மீ., வேகத்தில் செல்லும். 150 கிலோ வரை லோடு ஏற்றினாலும், வேகம் குறையாது.'ஓவர் லோடு' ஏற்றினால், 'டிரிப்' ஆகும் வசதியும், பிரேக் பிடித்தால், ஆப் ஆகும் வசதியும் உள்ளது.
இதேபோல், நான்கு சக்கர வாகனங்களுக்கு, தண்ணீரில் இருந்து ஹைட்ரஜனை பிரித்தெடுத்து, எரிபொருள் ஊக்கியாக மாற்றும் செயல்பாட்டை கண்டுபிடித்துள்ளேன். இதனால் வாகனங்களில் இருந்து, 'கார்பன் மோனாக்சைடு' வராமல் தடுக்கப்படும்.இவ்வாறு, அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE