கோவை:பிளஸ் 2 பொதுத்தேர்வில், பள்ளி வாரியாக பெற்ற தேர்ச்சி விகிதம், மாணவர்கள் தோல்வியை தழுவியதற்கான காரணம் குறித்து, முதன்மை கல்வி அலுவலர், தலைமையாசிரியர்களுடன் ஆன்லைன் வாயிலாக, நேற்று ஆய்வு நடத்தினார்.கோவை மாவட்டத்தில், 353 மேல்நிலைப்பள்ளிகளை சேர்ந்த, 32 ஆயிரத்து 874 பேர் தேர்வெழுதியதில், 31 ஆயிரத்து 686 பேர் தேர்ச்சி பெற்றனர். ஒட்டுமொத்தமாக, 96.39 சதவீத தேர்ச்சியுடன் மாநில தரப்பட்டியலில், கோவை மூன்றாமிடம் பிடித்தது.அரசுப்பள்ளிகளை பொறுத்தமட்டில், 90.57 சதவீத தேர்ச்சி விழுக்காடு கிடைத்துள்ளது. ஆனால், 81 அரசுப்பள்ளிகள் இருப்பினும், ஏழு பள்ளிகளே, நுாறு சதவீத தேர்ச்சி பெற்றுள்ளன.எட்டு அரசுப்பள்ளிகள், 75 சதவீதத்திற்கும் கீழ் தேர்ச்சி விழுக்காடு பெற்றிருக்கின்றன. குறிப்பாக, குறிச்சி அரசு மேல்நிலைப்பள்ளி, 52.38 சதவீத தேர்ச்சியே பெற்றுள்ளது.இப்பள்ளியில் இருந்து, 21 மாணவர்களே தேர்வெழுதிய நிலையில், 11 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர்.கடந்தாண்டை ஒப்பிடுகையில், குறைந்த தேர்ச்சி விழுக்காடு பெற்ற பள்ளி தலைமையாசிரியர்களிடம், நேற்று நடந்த ஆன்லைன் வழியிலான ஆய்வுக்கூட்டத்தில், முதன்மை கல்வி அலுவலர் உஷா விளக்கம் பெற்றார்.இது குறித்து, அவர் கூறியதாவது:பிளஸ் 2 ரிசல்ட்டில், மாணவர்கள் தோல்வியை தழுவிய பாடங்கள் பற்றி விவாதிக்கப்பட்டது. வரும் பொதுத்தேர்வுக்கு, தயாராக வேண்டிய செயல்முறைகள் குறித்து, தலைமையாசிரியர்களுக்கு விளக்கப்பட்டது. விரைவில் பள்ளிக்கு நேரில் சென்று, பாட ஆசிரியர்களுடன் ஆய்வு செய்யப்படும்.பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 மாணவர்களுக்கு, புத்தகங்கள் வினியோகிக்கப்பட்டு, பாடம் சார்ந்த வீடியோக்கள் பதிவிறக்கம் செய்து தரப்பட்டுள்ளன. இம்மாணவர்களின் கல்வி நிலை, சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்க, ஆசிரியர்கள் வாட்ஸ்-அப் குழுக்கள் உருவாக்கியுள்ளனர்.பிற வகுப்புகளுக்கும், கல்வி தொலைகாட்சியில் விளக்கப்படும் பாடங்கள் தவிர, முக்கிய குறிப்புகள் தயாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.இவ்வாறு, அவர் கூறினார்.பிளஸ் 2 ரிசல்ட்டில், மாணவர்கள் தோல்வியை தழுவிய பாடங்கள் பற்றி விவாதிக்கப்பட்டது. வரும் பொதுத்தேர்வுக்கு, தயாராக வேண்டிய செயல்முறைகள் குறித்து, தலைமையாசிரியர்களுக்கு விளக்கப்பட்டது. விரைவில் பள்ளிக்கு நேரில் சென்று, பாட ஆசிரியர்களுடன் ஆய்வு செய்யப்படும்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE