பொது செய்தி

தமிழ்நாடு

முஸ்லிம் அமைப்பினருடன் போலீசார் கலந்துரையாடல்

Added : ஜூலை 29, 2020
Share
Advertisement

போத்தனூர்:போத்தனூரில், முஸ்லிம் அமைப்பினருடன் போலீசார் கலந்துரையாடல் நடந்தது.போத்தனூர் மெயின் ரோட்டிலுள்ள தனியார் திருமண மண்டபத்தில், நடந்த கூட்டத்திற்கு மாநகர போலீஸ் துணை கமிஷனர் ஸ்டாலின் தலைமை வகித்தார்.அவர் பேசுகையில், "ஆக., 1ம் தேதி கொண்டாடப்படும் பக்ரீத் பண்டிகையின் போது, அனைவரும் சமுக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். அவசியமின்றி கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டும். சட்டம் -- ஒழுங்கு பாதிக்கும் வகையில் நடக்கக்கூடாது.கொரோனா பரவலை தவிர்க்க, அனைவரும் ஒத்துழைக்க வேண்டும். வெளியிடங்களுக்கு சென்று, வந்தால் தனிமைப்படுத்துதல் அவசியம். மாநகராட்சியினர் மேற்கொள்ளும் அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கும், ஒத்துழைக்க வேண்டும்,'' என்றார்.மாநகராட்சி தெற்கு மண்டல உதவி கமிஷனர் ரவி, போலீஸ் உதவி கமிஷனர் செட்ரிக் மனுவேல் உள்ளிட்ட உதவி கமிஷனர்கள், இன்ஸ்பெக்டர்கள், பல்வேறு முஸ்லிம் அமைப்புகளை சேர்ந்தவர்கள் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X