பொது செய்தி

இந்தியா

ஜம்மு - காஷ்மீர் தேர்தல் சர்ச்சை கவர்னருக்கு ஆணையம் கண்டனம்

Added : ஜூலை 29, 2020
Share
Advertisement

புதுடில்லி : ஜம்மு - காஷ்மீரில் எப்போது தேர்தலை நடத்த வேண்டும் என்பது குறித்தும், தேர்தல் தேதி குறித்தும் அறிவிக்கும் அதிகாரம், எங்களுக்கு மட்டுமே உண்டு. இதில், கவர்னர் தலையிட வேண்டிய அவசியமில்லை' என, தலைமை தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

மறு சீரமைப்பு : ஜம்மு - காஷ்மீர் துணை நிலை கவர்னர், ஜி.சி.முர்மு, காஷ்மீரில் சட்டசபை தேர்தலை நடத்துவது குறித்து, அவ்வப்போது கருத்து தெரிவித்து வந்தார்.'காஷ்மீரில் தேர்தலை நடத்துவதில் எந்த பிரச்னையும் இல்லை. கொரோனா ைரஸ் பிரச்னை மட்டுமே உள்ளது' எனக் கூறியிருந்தார்.சமீபத்தில், 'தொகுதி மறு சீரமைப்பு செய்த பின், ஜம்மு - காஷ்மீரில் தேர்தல் நடத்துவதற்கான தேதி அறிவிக்கப்படும்' எனக் கூறியிருந்தார்.

இதனால் கடும் அதிருப்தி அடைந்த தலைமை தேர்தல் ஆணையம், நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது:தேர்தலை நடத்துவது, தேர்தல் தேதியை அறிவிப்பது உள்ளிட்ட விஷயங்கள், தலைமை தேர்தல் ஆணையத்தின் பணிகள். இது குறித்து முடிவு செய்வதற்கான அனைத்து உரிமையும், அரசியல் சட்ட அமைப்பான தேர்தல் ஆணையத்துக்கு மட்டுமே உண்டு.அவசியமில்லைஇதில், மற்றவர்கள் அறிவிப்பு வெளியிடுவதற்கோ, கருத்து தெரிவிப்பதற்கோ அவசியமில்லை. தேர்தல் ஆணையத்தை தவிர, வேறு எந்த அமைப்புக்கும் இதற்கான அதிகாரம் இல்லை.

தேர்தல் தேதியை முடிவு செய்வதற்கு முன், அனைத்து துறை அதிகாரிகள், சம்பந்தப்பட்ட மாநில அரசு, அரசியல் கட்சிகள் உள்ளிட்டோரின் கருத்து கேட்கப்படும். மத்திய துணை ராணுவப் படையின் தேவை, போக்குவரத்து வசதி உள்ளிட்ட எல்லா விஷயங்கள் குறித்தும் ஆலோசித்த பின்பே, தேர்தல் தேதி குறித்து முடிவு எடுக்கப்படும். இவ்வாறு, அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X