பொது செய்தி

இந்தியா

இதே நாளில் அன்று

Added : ஜூலை 29, 2020
Share
Advertisement
இதே நாளில் அன்று


ஜூலை, 29, 1996

ஹரியானா மாநிலம், கால்கா நகரில், 1909 ஜூலை, 16ம் தேதி பிறந்தவர், அருணா. கோல்கட்டாவில், ஆசிரியையாகப் பணியாற்றினார். காங்கிரஸ் தலைவர்களில் ஒருவராக விளங்கிய, ஆசாப் அலியை, பல்வேறு எதிர்ப்புகளை மீறி, திருமணம் செய்து கொண்டார். நாட்டின் சுதந்திரத்திற்காக உப்பு சத்தியாகிரகம் உட்பட, பல்வேறு போராட்டங்களில் பங்கேற்று சிறை சென்றார்.

சுதந்திரத்திற்குப் பின், சமூக சேவைகளில் ஈடுபட்டார். நலிவுற்ற பெண்கள், மாணவர்கள் நலனுக்காகப் பாடுபட்டார். டில்லியின் முதல் மேயராக, 1958-ல் நியமிக்கப்பட்டார். 'லிங்க்' என்ற வார இதழையும், 'பேட்ரியாட்' நாளிதழையும் துவக்கி, நடத்தினார். அமைதிக்கான, லெனின் பரிசும், ஜவஹர்லால் நேரு விருதும், இவருக்கு வழங்கப்பட்டன. 1996 ஜூலை, 29ம் தேதி இயற்கை எய்தினார்.

'பாரத ரத்னா' அருணா ஆசாப் அலி காலமான தினம் இன்று!

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X