பொது செய்தி

தமிழ்நாடு

மழை துவங்கியதால் குடிமராமத்தை நிறுத்த விவசாயிகள் வேண்டுகோள்

Added : ஜூலை 29, 2020
Share
Advertisement

சிவகங்கை:தற்போது பருவமழை பெய்வதால், குடிமராமத்து பணிகளை நிறுத்தி வைக்க விவசாயிகள் சங்கத்தினர்மாவட்ட நிர்வாகத்திற்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
தமிழக அரசின் சார்பில் குடிமராமத்து திட்டத்தின் கீழ் கண்மாய், குளங்கள், ஏரி, வரத்துக் கால்வாய் துாரெடுக்கப்படுகிறது. தற்போது சிவகங்கை மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. கண்மாய், குளங்கள், ஊரணிக்கு நீர் வரத்து துவங்கியுள்ளது. தொடர்ந்து மழைகாலம் வருவதால் குடிமராமத்து பணிகளை நிறுத்த வேண்டும்.

பருவமழை காலம் முடிந்து விவசாய பணிகள் நிறைவு பெற்றபின் குடிமராமத்து பணிகளை தொடர வேண்டும்.விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் ஆறுமுகம் தெரிவித்ததாவது: கல்லல் ஒன்றியத்தில் மட்டும் குடி மராமத்து திட்டத்தில் 96 கண்மாய்கள் துார் வாரிட திட்டமிடப்பட்டுள்ளது.

எங்கள் பகுதி கண்மாய்களில் அரை கண்மாய்க்கு தண்ணீர் உள்ளது. தொடர்ந்து மழை பெய்வதால் கண்மாய் நீரை வெளியேற்றி பணிகளை செய்ய முயற்சித்து வருகின்றனர். இதனால் விவசாயிகள் பயிர் பணி பாதிக்கப்படும். குடிமராமத்து பணியை மழைக்காலம் முடிந்த பின்பு செய்தால் சிறப்பாக செய்ய முடியும். மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும், என அவர் தெரிவித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X