அரசியல் செய்தி

தமிழ்நாடு

இட ஒதுக்கீடு விவகாரம்: திமுக நாளை ஆலோசனை

Updated : ஜூலை 29, 2020 | Added : ஜூலை 29, 2020 | கருத்துகள் (39)
Share
Advertisement
மருத்துவ படிப்பு இட ஒதுக்கீடு தொடர்பாக, மாவட்ட செயலர்கள், எம்.பி., - எம்.எல்.ஏ.,க்களுடன், தி.மு.க., தலைவர் ஸ்டாலின், நாளை(ஜூலை 30) ஆலோசனை நடத்துகிறார்.'மருத்துவ கல்வியில், இதர பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினருக்கு, இட ஒதுக்கீடு உரிமை உண்டு' என, சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. இந்த தீர்ப்பு கிடைப்பதற்கு, தி.மு.க., தொடுத்த வழக்கு தான் முக்கிய காரணம் என்பதை, பொது மக்கள்
DMK, Stalin, MK Stalin, DMK Chief, consultation, OBC reservation, medical studies, திமுக, ஸ்டாலின்

மருத்துவ படிப்பு இட ஒதுக்கீடு தொடர்பாக, மாவட்ட செயலர்கள், எம்.பி., - எம்.எல்.ஏ.,க்களுடன், தி.மு.க., தலைவர் ஸ்டாலின், நாளை(ஜூலை 30) ஆலோசனை நடத்துகிறார்.

'மருத்துவ கல்வியில், இதர பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினருக்கு, இட ஒதுக்கீடு உரிமை உண்டு' என, சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. இந்த தீர்ப்பு கிடைப்பதற்கு, தி.மு.க., தொடுத்த வழக்கு தான் முக்கிய காரணம் என்பதை, பொது மக்கள் மத்தியில் எடுத்துச் சொல்ல வேண்டும் என, தி.மு.க., விரும்புகிறது.

மேலும், இந்த உத்தரவை அமல்படுத்துமாறு, பிரதமர் மோடிக்கு, தி.மு.க., - எம்.பி.,க்கள் அழுத்தம் தரவும், இவ்விவகாரத்தில், அடுத்தகட்டமாக என்ன மாதிரியான நடவடிக்கைகளை எடுக்கலாம் என்பது குறித்தும் விவாதிக்க, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் திட்டமிட்டுள்ளார்.

இது தொடர்பாக ஸ்டாலின், நேற்று வெளியிட்ட அறிக்கையில், 'தி.மு.க., மாவட்ட செயலர்கள் மற்றும் எம்.பி.,க்கள் மற்றும் எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம், நாளை மாலை, 4:30 மணிக்கு, 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக நடைபெறவுள்ளது' என, கூறியுள்ளார்.

- நமது நிருபர் -

Advertisement
வாசகர் கருத்து (39)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
s t rajan - chennai,இந்தியா
29-ஜூலை-202023:08:34 IST Report Abuse
s t rajan இட ஒதுக்கீடு ஒழிந்தால்தான் ஏழை எளியவர்கள் படிப்பில், வேலை வாய்ப்பில் முன்னேற்றம காண முடியும் இல்லா விட்டால் கொள்ளையடித்து வாழும் சுடலை போன்றவர்களின் சந்ததிகளே அனைத்தையும் அள்ளிக் கொண்டு ஏழைகளை பிச்சைக்காரர்கள் ஆக்கி விடுவார்கள்.
Rate this:
Cancel
கொக்கி குமாரு - கோபால்புரம் தட்டை, உலகம் உருண்டை,,கோகாஸ் கில்லிங் இஸ்.
29-ஜூலை-202020:00:02 IST Report Abuse
கொக்கி குமாரு ஏன்னு தெரியல, தமிழகத்தின் எந்த அரசியல் தலைவர்களின் போட்டோக்களை பார்க்கும்போது வராத அருவருப்பு சுடலையின் போட்டோவை பார்க்கும்போது வருகிறது. எப்படியாவது பதவிக்கு வரவேண்டும், ஊழல்கள் செய்து கொள்ளை அடிக்கவேண்டும் என்ற எண்ண அலைகள் அவர் முகத்தில் தெரிவதனால் இருக்குமோ.
Rate this:
Cancel
அச்சம் தவிர் தமிழா அடங்க மறு வீறு கொள் வெற்றி நமதே ஒரு வயசானவன் சொல்லுகிறான் சமசீர் கல்வி பற்றி ஏன் தமிழ்நாட்டில் தான் நிறைய பெரிய மருத்துவமனைகள் அந்த DR எல்லாம் எங்கிருந்து வந்தவராகள் எல்லாம் சமசீர் நீட் இல்லாமல்
Rate this:
RAJI NATESAN - ஹிந்து என்று சொல்லும் தமிழன் ,இந்தியா
29-ஜூலை-202020:19:52 IST Report Abuse
RAJI NATESANsuper nethi adi...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X