பொது செய்தி

தமிழ்நாடு

சிவகங்கையில் ஆக.,14 வரை ஊரடங்கு சுகாதாரத்துறை எதிர்பார்ப்பு

Added : ஜூலை 29, 2020
Share
Advertisement

சிவகங்கை:சிவகங்கை மாவட்டத்தில் கொரோனா தொற்று பரவல் கட்டுக்குள் வர ஆக.,14 வரை ஊரடங்கு தேவை என சுகாதாரத்துறையினர் விரும்புகின்றனர்.

மார்ச் 30 முதல் டில்லி, மும்பை, சென்னையில் இருந்து மாவட்டத்திற்குள் வந்தவர்கள் மூலம் கொரோனா வைரஸ் பரவியது. அதன் வேகம் அதிகரித்து அதிகபட்சமாக 2000 பேர் வரை தொற்று உறுதியானது. அரசு மருத்துவமனையில் உரிய சிகிச்சை, கோவிட் கேர் சென்டரில் கவனிப்பு, சித்த மருத்துவ சிகிச்சை மூலம் தொற்று எண்ணிக்கையை குறைத்து வருகின்றனர்.

மக்கள் சமூக இடைவெளியை கடைபிடிப்பதும், முக கவசம் அணிந்து செல்லுதல், அடிக்கடி சானிடைசர் கொண்டு கைகளை சுத்தம் செய்தலை கடைபிடிப்பதால், தொற்று குறைகிறது. இன்னும் முழுமையாக தொற்று இல்லாத மாவட்டமாக மாற்ற ஆக.,14 வரை ஊரடங்கை நீட்டித்தால் நன்றாக இருக்கும் என சுகாதாரத்துறையினரிடையே எதிர்பார்ப்பு உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X