பொது செய்தி

தமிழ்நாடு

பவளபாறைகள் காப்பாற்றஅரசு முன்வர வேண்டும்

Added : ஜூலை 29, 2020
Share
Advertisement

மன்னார் வளைகுடா தேசிய கடல்சார் உயிரியல்பூங்கா நாட்டின் பாதுகாக்கப்பட்ட பகுதி. 21 சிறிய தீவுகளையும், தீவுகளை ஒட்டி அரணாக விளங்கும் பவளப்பாறைகளையும் உள்ளடக்கியது.

துாத்துக்குடியில் துவங்கி ராமநாதபுரம் மாவட்டம் தனுஷ்கோடி வரை 160 கி.மீ.,க்கு பரந்துள்ளது. மன்னார் வளைகுடா உயிர்கோள காப்பகத்தின் ஒரு பகுதியாகும்.இங்குள்ள பவளப்பாறைகள் அரிய வகை கடல் தாவரங்களுக்கும், விலங்குகளுக்கும் உறைவிடமாக திகழ்கிறது. இங்கு 104 வகை பவளத்திட்டுகள், 147 வகை கடல் பாசிகள், 13 வகை கடல் புற்கள், கடல் சங்குகள், ஆமைகள், கடல் குதிரைகள், கடல் பசுக்கள்,கடல் அட்டைகள், கடல் பல்லிகள், அரியவகை டால்பின்கள் உயிர் வாழ்கின்றன.

இவற்றின் வாழ்வாதாரமாகவும், அழகிய 21 தீவுகளின் பாதுகாப்பு அரணாகவும் இங்குள்ள பவளப்பாறைகள் உள்ளன.சமீப காலமாக இவை அழிக்கப்படுகின்றன.மீனவர்கள் பயன் படுத்தும் தடை செய்யப்பட்ட வலைகளாலும், அதிக திறன் கொண்ட மோட்டார் படகுகளாலும் பவளப்பாறைகள் அழிக்கப்படுகின்றன.இதே நிலை நீடித்தால் உயிர்கோள காப்பத்தின் அழகிய தீவுகளுக்கும், அரியவகை உயிரினங்களுக்கும் ஆபத்தை ஏற்படுத்தும். எனவே மாவட்ட நிர்வாகமும், உயிர்கோள காப்பக அதிகாரிகளும் தடுப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X