சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பஸ் இல்லாததால் சரக்கு வாகனத்தில்பயணிக்கும் மக்கள்: விபத்து அபாயம்

Added : ஜூலை 29, 2020
Share
Advertisement

ராமநாதபுரம்:ராமநாதபுரத்தில் பஸ் இயக்கப்படாததால், போக்குவரத்து விதிகளை மீறி சிலர் சரக்கு வாகனங்களில் ஆட்களை ஏற்றிச்செல்வதால் விபத்து அபாயம் உள்ளது.

கொரோனா வைரஸ் தொற்று நோய் பரவல் தடுப்பு ஊரடங்கால் பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. அதேசமயம் சமூக இடைவெளியை பின்பற்றி சந்தை, கடைகள்,கட்டுமான வேலைகள்மேற்கொள்ள அரசு அனுமதி அளித்துள்ளது.கிராமங்களில் உள்ள கூலித் தொழிலாளர்கள் வேலைக்கு சரக்கு வாகனங்களில் பயணம் செய்கின்றனர். சமூக இடைவெளியை பின்பற்றாமல் உள்ளதால் கொரோனா பரவ வாய்ப்புஉள்ளது.

மேலும் வாகனத்தில் அதிகமான ஆட்களை ஏற்றி அதிவேகமாக செல்லும்போது விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது என்பதை சரக்கு வாகன டிரைவர்கள், பயணிக்கும் மக்கள் உணர்வதில்லை.போக்குவரத்து விதியை மீறி சரக்கு வாகனங்களில் ஆட்கள் ஏற்றிச் செல்பவர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X