பொது செய்தி

இந்தியா

வங்கி தலைவர்களுடன் மோடி இன்று ஆலோசனை

Updated : ஜூலை 29, 2020 | Added : ஜூலை 29, 2020 | கருத்துகள் (3)
Share
Advertisement
PM modi, Modi, banks, NBFC, narendra modi, பிரதமர், மோடி, ஆலோசனை

புதுடில்லி : 'கொரோனா' வைரஸ் பரவல் மற்றும் ஊரடங்கால் ஏற்பட்டுள்ள பொருளாதார பாதிப்புகளை சமாளிப்பது தொடர்பாக, பெரிய வங்கிகள் மற்றும் வங்கி சாரா நிதி நிறுவனங்களின் தலைவர்களுடன், பிரதமர் நரேந்திர மோடி, இன்று(ஜூலை 29) ஆலோசனை நடத்த உள்ளார்.

கொரோனா வைரஸ் பரவல் மற்றும் ஊரடங்கால் ஏற்பட்டுள்ள பொருளாதார பாதிப்புகளை எதிர்கொள்ளும் வகையில், மத்திய அரசு பல்வேறு சலுகைகளை, அறிவிப்புகளை வெளியிட்டது. சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள் உள்பட பல்வேறு துறைகளுக்கு கடன் வசதி உள்ளிட்ட, 20.97 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள திட்டங்கள் அறிவிக்கப்பட்டன.


latest tamil news



பல்வேறு துறைகளுக்கான கடனுதவி அளிப்பது உள்ளிட்ட பொருளாதார பிரச்னைகள் குறித்து விவாதிப்பதற்காக, வங்கிகள் மற்றும் வங்கி சாரா நிதி நிறுவனங்களின் தலைவர்கள் கூட்டம் இன்று நடக்க உள்ளது.

'வீடியோ கான்பரன்ஸ்' முறையில் நடக்கும் இந்தக் கூட்டத்தில், பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்க உள்ளதாக, மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.'நாட்டின் பொருளாதாரத்தை மீட்பது தொடர்பாக, வங்கித் தலைவர்களுடன் அவர் ஆலோசனை நடத்துவார்' என, தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
J.Isaac - bangalore,இந்தியா
29-ஜூலை-202014:50:34 IST Report Abuse
J.Isaac அனைத்து வங்கிளையும் தனியார்மயமாக்கி , நடுத்தர ஏழை மக்களின் சேமிப்புகளை அனைத்து துறைகளுக்கும் கடன் கொடுத்து திவாலாக்கி மக்களளின் வாழ்க்கையை தத்தளிக்க விடுவது.
Rate this:
Cancel
Raj - nellai,இந்தியா
29-ஜூலை-202014:40:13 IST Report Abuse
Raj எப்படி முழு பணத்தையூம் ஆட்டையை போடலாம் என்று ஆலோசனை
Rate this:
Cancel
RajanRajan - kerala,இந்தியா
29-ஜூலை-202008:36:10 IST Report Abuse
RajanRajan உலகளவில் பொருளாதாரம் நிலைகுலைந்துள்ளது.நம் பொருளாதாரத்தை மீட்டெடுப்பது வருங்காலத்தில் மிக பெரிய சவால். சுய ஆதாயம் கருதாத ஒற்றுமை சார்ந்து ஒருவருக்கு ஒருவர் உதவும் தியாகம் சார்ந்த அர்பணிப்புகள் ஓன்று தான் இங்கு தீர்வளிக்கும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X