பொது செய்தி

தமிழ்நாடு

செய்திகள் சில வரிகளில்:ராமநாதபுரம்

Added : ஜூலை 29, 2020
Share
Advertisement

விவசாயிகளுக்கு மானியம்
பரமக்குடி: சத்திரக்குடியில் சிறு, குறு விவசாயிகளுக்கு பிரதமரின் நுண்ணீர் பாசன திட்டத்தின் மூலம் துணை நிலை பாசன திட்டத்திற்கு 100 சதவீத மானியம் வழங்கப்படுகிறது. வேளாண்மை உதவி இயக்குனர் கதிரேசன் கூறிய போது, விவசாயிகளின் தேவைக்கேற்ப அவர்களுடைய பட்டா, சிட்டா, விவசாயி சான்று, ரேஷன், ஆதார் நகலுடன் அலுவலகத்தை தொடர்பு கொண்டால் மானியத்துடன் பாசன திட்ட மானியம், விதை மானியம் பெற்றுக் கொள்ளலாம், என்றார்.

மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி எண்

ராமநாதபுரம்: கொரோனா பேரிடர் ஊரடங்கு கால கட்டத்தில் ராமநாதபுரம் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக அரசு சார்பில், அரிசி, மளிகைப்பொருட்கள் நிவாரணமாக வழங்கப்படுகிறது. தேவைப்படும் மாற்றுத்திறனாளிகள் 1800 425 0111 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என கலெக்டர் வீரராகவ ராவ் தெரிவித்துள்ளார்.

ஆக்கிரமிப்பை அகற்ற வலியுறுத்தல்

ராமநாதபுரம்: முதுகுளத்துார் அருகே மேலக்கொடுமலுார், கோனேரியேந்தல் பகுதியில் 600 ஏக்கரில் பெரியகண்மாய் அமைந்துள்ளது. இதன் மூலம் 1500 ஏக்கர் விவசாயம் நடக்கிறது. இந்நிலையில் கண்மாய் நீர்பிடிப்பு பகுதியை சிலர் ஆக்கிரமிப்பு செய்து வருகின்றனர். அவற்றை அகற்ற வேண்டும், வேனார் உடையார் கால்வாய், பரளை ஆற்றுகால்வாய் ஆகியவற்றை மராமத்து செய்து தர வேண்டும் என கிராம மக்கள் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்துஉள்ளனர்.

நிவாரணம் வழங்க வலியுறுத்தல்

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்ட தமிழ்நாடு மருத்துவர் சமூக நல சங்கம், முடிதிருத்தும் தொழிலாளர் நலச்சங்கம் சார்பில், மாவட்டச் செயலாளர் செந்தில்குமார் தலைமையில் கொரோனா நிவாரணம் வழங்ககோரி கலெக்டர்அலுவலகத்தில் மனு அளித்துஉள்ளனர். நலவாரியத்தில் பதிவு செய்யாத தொழிலாளர்களுக்கு நிவாரணமாக ரூ.2 ஆயிரம் அரசு அறிவித்து இரண்டு மாதமாகியும்இதுவரை வழங்கவில்லை. ஊரடங்கால் வருமானமின்றி சிரமப்படுகிறோம். நிவாரணத்தொகையை வழங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

உயர்மின் அழுத்த கம்பி அமைக்க எதிர்ப்பு

ராமநாதபுரம்: ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் பாரனுார் மக்கள் அளித்துள்ள மனு விபரம்:பாரனுார் ஊராட்சி கைலாசபுரம் காலனியில் 70க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. தற்போது தனியார் இறால் பண்ணைக்காகஉயர்மின் அழுத்த கம்பிகள் அமைக்க காலனிக்குள் மின்கம்பங்கள் ஊன்றியுள்ளனர். நிறைய குடிசை வீடுகள் இருப்பதால் அச்சப்படுகிறோம். இறால் பண்ணைக்கு செல்ல வேறு வழி இருக்கிறது. ஆகையால் குடியிருப்பு பகுதிக்குள்ஊன்றப்பட்டுள்ள மின்கம்பங்களை அகற்ற வேண்டும்,' என மனுவில் வலியுறுத்தியுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X