பொது செய்தி

தமிழ்நாடு

திருப்புமுனை ஏற்படுத்திய பி.கே.எம். 1 ரக முருங்கை தோட்டக்கலை கல்லூரி டீன் பேச்சு

Added : ஜூலை 29, 2020
Share
Advertisement
 திருப்புமுனை ஏற்படுத்திய பி.கே.எம். 1 ரக முருங்கை தோட்டக்கலை கல்லூரி டீன் பேச்சு

தேனி:''உலக அளவில் பி.கே.எம். 1 முருங்கை ரகம் விவசாயத்தில் திருப்புமுனை ஏற்படுத்தியது,'' என, தோட்டக்கலை கல்லுாரி டீன் ஆறுமுகம் பேசினார்.

பெரியகுளம் அரசு தோட்டக்கலை கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிலைய தொழில் மேம்பாட்டு மையம் சார்பில், 'முருங்கை அற்புத மரம்' என்ற தலைப்பில் இணைய வழி கருத்தரங்கு நடந்தது. இதில் டீன் பேசியதாவது: முருங்கையில் 14 வகை சத்துக்கள் உள்ளன. 100 கிராம் பவுடரில் 27 சதவீத புரோட்டின், 19 சதவீதம் நார்சத்து, பாலை விட 17 சதவீதம் கால்சியமும், வாழைப்பழத்தைவிட 9 மடங்கு பொட்டாசியமும் உள்ளது.

பி.கே.எம். 1 ரக முருங்கை வெளியிட்ட பின் திருப்புமுனை ஏற்பட்டு உலக அளவில் வணிக ரீதியாக பயிரிட துவங்கினர்.முருங்கை இலை பவுடர், டீ, குளிர்பானம் ஆகவும், வத்தல், நுாடூல்ஸ் ஆக பயன்படுத்துகின்றனர். மாட்டு தீவனத்தில் சேர்ப்பதால் 30 சதவீத பால் உற்பத்தியும், ஆட்டு தீவனத்தில் 40 சதவீத இறைச்சி அதிகரிக்கும்.

கோழி, மீன் தீவனங்களில் அதிகம் பயன்படுகிறது.அடுத்த ஐந்து ஆண்டுகளில் இதன் தேவை அதிகம் இருக்கும் என்பதால் அதிக தொழில் வாய்ப்புகள் உருவாகும், என்றார். வசந்தன், சுபேஷ் ரஞ்சித்குமார் ஒருங்கிணைத்தனர். 137 பேர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X