பொது செய்தி

தமிழ்நாடு

கல்லூரி செமஸ்டர் தேர்வு ரத்து :மதிப்பெண் கணக்கீடு எப்படி?

Added : ஜூலை 29, 2020
Share
Advertisement

கோவை:கல்லுாரிகளில் செமஸ்டர் தேர்வு ரத்து செய்யப்பட்ட நிலையில், மதிப்பெண் கணக்கிடுவது குறித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.கொரோனா காரணமாக தமிழகத்தில் உள்ள மருத்துவ படிப்பு சார்ந்த கல்லுாரிகள், பிற அனைத்து கல்லுாரிகளுக்கும் இறுதியாண்டு தவிர்த்து, மற்ற ஆண்டு மாணவர்களுக்கு செமஸ்டர் தேர்வு ரத்து செய்யப்பட்டது. கலை, அறிவியல், இன்ஜி., படிப்புகளில் இளநிலை மற்றும் முதுகலை படிப்பில் மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்கி தேர்ச்சி வழங்குவதற்கான வழிகாட்டி நெறிமுறைகளை வகுத்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.முந்தைய செமஸ்டர் தேர்வுகளில் பெற்ற மதிப்பெண்களை, 70 சதவீதத்துக்கு கணக்கீடு செய்தும், முந்தைய செமஸ்டரின் மறுமதிப்பீடு மதிப்பெண்களில் இருந்து, 30 சதவீத மதிப்பெண்களை கணக்கீடு செய்து மொத்தம், 100 மதிப்பெண்களுக்கு மாணவர்களின் மதிப்பெண் கணக்கிடப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.முந்தைய செமஸ்டரில் அரியர் வைத்திருந்தால் மீண்டும் அரியர் பாடத்திற்கான தேர்வை எழுத வேண்டும். இந்த தேர்வுகள் கல்லுாரிகள் திறந்த பின்னர் நடத்தப்பட வாய்ப்பு இருக்கிறது. விருப்ப பாடங்களுக்கான மதிப்பெண், 100 சதவீதம் அகமதிப்பீட்டின் அடிப்படையில் வழங்கப்படும்.அக மற்றும் புற மதிப்பீட்டு அடிப்படையில் தேர்ச்சிக்கான மதிப்பெண் பெறாத மாணவர்கள் அனைவருக்கும் கருணை அடிப்படையில் தேர்ச்சிக்கான மதிப்பெண் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தொலை துார கல்வியில் இறுதியாண்டு தவிர்த்து மற்ற ஆண்டு மாணவர்களுக்கு செமஸ்டர் தேர்வு நடத்தப்படாமல் இருந்தால் அனைவருக்கும் தேர்ச்சி வழங்கப்படும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X