பொது செய்தி

தமிழ்நாடு

திருப்பூரில் தொற்று குறைகிறது ஒரே நாளில் 56 பேர் 'டிஸ்சார்ஜ்'

Added : ஜூலை 29, 2020
Share
Advertisement

திருப்பூர்:திருப்பூர் மாவட்டத்தில், கொரோனா பாதித்தவர்கள் வேகமாக குணமடைந்து வருகின்றனர்; நேற்று ஒரே நாளில், 56 பேர் 'டிஸ்சார்ஜ்' செய்யப்பட்டுள்ளனர்.திருப்பூர் மாவட்டத்தில், கடந்த வாரம் கொரோனா தொற்று அதிகமாக பரவிய நிலையில், தற்போது பாதிப்பு குறைந்துள்ளது. நேற்று, 18 பேருக்கு மட்டும் தொற்று உறுதியாகியுள்ளது.திருப்பூர், குமாரசாமி காலனி; அவிநாசி - அவிநாசிலிங்கம்பாளையம், நடுவச்சேரி, தெக்கலுார், திருமுருகன்பூண்டி, தெக்கலுார் சமத்துவபுரம் பகுதி; உடுமலையில்,வடபூதிநத்தம், டவுன் போலீஸ் ஸ்டேஷன், பூளாங்கிணறு கிருஷ்ணாபுரம், கரட்டூர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த, எட்டு பெண்கள் உட்பட, 18 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது.திருப்பூர் கோல்டன் நகரை சேர்ந்த், 65 வயது முதியவர், அனுப்பர்பாளையத்தை சேர்ந்த, 47 வயது பெண், குமரன் நகரை சேர்ந்த, 52 வயது ஆண் என, மூன்று பேர் இறந்தனர். பலி, 15 ஆக உயர்ந்துள்ளது.மாவட்டத்தின் மொத்த பாதிப்பு, 757 ஆக உயர்ந்துள்ளது. நேற்று ஒரே நாளில், 56 பேர் குணமடைந்து, டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதுவரை, 443 பேர் குணமாகியுள்ளனர். 299 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X